போன ஜென்ம கொலை: துரைமுருகன் கிண்டல்
வேலூர்:
போன ஜென்மத்தில் இவன் ஒருத்தனைக் கொலை செய்தான் என்று சொல்லிக் கூட அதிமுக ஆட்சியில் யாரை வேண்டுமானாலும் கைது செய்வார்கள் என்று திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கிண்டலடித்தார்.
தமிழ் செம்மொழியாக்கப்பட்டதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து வேலூர் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:
தேர்தல் நடக்கிறதென்றால் ஒருவர் ஜெயிப்பார். ஒருவர் தோற்பார். வெல்பவர் நாளை தோற்பார். இது அரசியலில் சகஜம். அரசியலில் ஏகப்பட்ட சித்து விளையாட்டுக்கள் உண்டு. ஆனால், அதற்காக ஒருவரை பழிதீர்க்க முயல்வது கண்ணியமல்ல. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக யாரையும் பழி வாங்கக் கூடாது.
அதிகாரத்தில் இருக்கிறோம். அமைச்சராக இருக்கிறோம். பெரிய தலைவராக இருக்கிறோம். நாம் சொன்னால் எஸ்பி, டிஎஸ்பி எல்லாம் வருகிறார்கள். நாம் சொல்வதை போலீஸ் கேட்கிறது என்பதற்காக ஆடக் கூடாது. அப்போது தான் நாம் அடக்கி வாசிக்க வேண்டும்.
அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டு இவரைக் கைது செய், அவரைக் கைது செய் என்று சொன்னால் இது அற்பனுக்கு வந்த அர்த்த ராத்திரி வாழ்வாகும். இது நீண்ட நாள் நிலைக்காது.
நானும் அமைச்சராக இருந்தவன் தான். ஆனால், இது போன்ற பேடி அரசியலை ஒருபோதும் நடத்தியதில்லை. திமுகவில் யாரும் இந்த வேலைகளைச் செய்ததில்லை. ஒரு நிரபராதியை பொய் வழக்கில் சிக்க வைத்தால் அந்த பாவம் சும்மா விடாது. ஏழு தலைமுறைக்கும் குடும்பத்தை சுத்தி வரும்.
அதிமுககாரர்களின் இதுபோன்ற செயல்கள் எங்களுக்கு வட்டி போட்டு ஓட்டுக்களாக வந்து சேரும்.
அதிமுக ஆட்சி கிட்டத்தட்ட முடிஞ்சு போச்சு. பட்ஜெட் முடிந்ததும் தேர்தல் வரும் என்கிறார்கள் சிலரர். சிலர் டிசம்பர், மார்ச்சில் வரும் என்கிறார்கள். திமுகவைப் பொறுத்தவரை எப்போது தேர்தல் வந்தாலும் நாங்க ரெடி.
திமுக ஆட்சியில் செய்த சாதனைகளில் ஒரு தம்பிடி அளவாவது இந்த ஜெயலலிதா செய்திருப்பாரா? திமுக ஆட்சி வழங்கிய சலுகைகளை ஒவ்வொன்றாகப் பறித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மரண அடி தந்தார்கள். இதனால் திமுக தந்த சலுகைகள் எல்லாம் மக்களுக்குத் திரும்பக் கிடைத்தன.
கலைஞர் ஆளும்போதும் மக்களுக்கு நன்மை செய்தார். எதிர்க் கட்சியாக இருந்தபோதும் நன்மை செய்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்டதற்கே இத்தனை சலுகைகளை ஜெயலலிதா திருப்பித் தந்திருக்கிறார் என்றால், இன்னொரு தேர்தல் இருக்கே (சட்டமன்றத்துக்கு).
அதிலும் ஜெயலலிதா தோற்று திமுக வந்தால் உங்களுக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும். இதனால் தான் எப்போதடா சட்டமன்றத் தேர்தல் வரும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவின் ஆட்சியில் நடப்பது என்ன?. அவனைப் பிடிக்கிறது.. இவனைப் பிடிக்கிறது.. ஜெயில்லே போட்றது. இந்த ஆட்டத்தைத் தானே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்ப இவங்ககிட்ட ஒருத்தரு மாட்டிக்கிட்டாரு, சங்கராச்சாரியார்.
போன ஜென்மத்திலே இந்த ஆளு ஒருத்தரைக் கொலை பண்ணிட்டார்னு சொல்லி புடிச்சாலும் புடிப்பாங்கடா சாமி. அந்த அளவுக்கு கேஸ் போட்றாங்கப்பா அதிமுக ஆட்சியில.
எந்த கேஸ் வேண்டுமானாலும் போடுங்க. அது எங்களுக்கு தேவையில்லாத ஒண்ணு. ஆனா, தமிழக மக்கள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?. சங்கராச்சாரியார் இப்போ போலீஸ் கஸ்டடியிலே. போலீசோ ஜெயலட்சுமி கஸ்டடியில... அப்படின்னு பேசிக்கிறாங்கப்பா.
ஜெயலலிதா ஆட்சியில் ஆ.. ஊ என்றால் உடனே கேஸ். ஒரு வழக்கு. இதையெல்லாம் பார்த்து பயப்படுற ஆளா திமுககாரன். கேஸ் போட்டா பேசுறதை விட்டுடுவோமா?. கேஸ், போலீஸ், அராஜகம் இதை சந்திக்கிறது திமுககாரனுக்கு அல்வா சாப்பிடுறது மாதிரி. எதற்கும் எப்போதும் நாங்கள் தயார்.
விளையாட்டுத்தனமா ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. விரைவில் இந்த விளையாட்டு முடிவுக்கு வரும் என்றார் துரைமுருகன்.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications