அப்புவின் கூட்டாளி ராயபுரம் மனோ?
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவுக்கும், வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்ராயபுரம் மனோவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தமிழர் குடியரசுக் கட்சித் தலைவர் தீனன் கூறியுள்ளார்.
தீனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்புவின் கூட்டாளிகள் பலர் அரசியல் போர்வையில் ஒளிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடிவருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் ராயபுரம் மனோ.
வட சென்னை காங்கிரஸ் கட்சித் தலைவராகிய ராயபுரம் மனோ, அப்புவுக்கு மிகவும் நெருக்கமானவர். மனோவின் அண்ணன் செல்வராஜ்,அப்புவுடன் சேர்ந்து சந்தன மரம் கடத்துவது, செம்மரக் கட்டைகளை (ரெட் வுட்) கடத்துவதில் நீண்ட நாளாக ஈடுபட்டு வருகிறார்.
அப்புவும் மனோவும் வடசென்னையின் பல பகுதிகளில் பலரது சொத்துக்களை அபகரித்துள்ளனர், கட்டப் பஞ்சாயத்து மூலம்அடாவடியாக மிரட்டி வாங்கியுள்ளனர். ஜப்பானில் இருந்து கம்ப்யூட்டர் உதி பாகங்களை கடத்தியுள்ளார் மனோ.
அப்புவின் நிழலுலக தொழில்கள், சட்டவிரோத காரியங்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் என அனைத்து விஷயங்களும் மனோவுக்குத்தெரியும். எனவே மனோவையும், அவரது அண்ணன் செல்வராஜுவையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தீனன்.
வட சென்னையில் ரெளத்தனத்துக்கு பெயர் போனவர் இந்த ராயபுரம் மனோ என்பது குறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications