ஜெ மீது பிரதமரிடம் வாஜ்பாய், அத்வானி புகார்
டெல்லி:
ஜெயேந்திரருக்கு நடந்து வரும் கொடுமைகளுக்குத் தீர்வு காணுமாறும், அவர் மனிதாபிமானரீதியில் நடத்தப்படுவதை உறுதிசெய்யுமாறும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பா.ஜ.க. தலைவர் அத்வானியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயேந்திரரை தனி பங்களாவுக்கு மாற்ற வேண்டும் என்று மீண்டும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெயேந்திரரை வேலூர் சிறையில் சென்று சந்தித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் குழு வழங்கிய அறிக்கையுடன் இன்றுபிரதமரை வாஜ்பாயும் அத்வானியும் சந்தித்தனர். அப்போது அந்த அறிக்கையை பிரதமரிடம் அவர்கள் வழங்கினர்.
அதில், சங்கராச்சாரியாருக்கு எதிராக தமிழக அரசு ஒரு போரைத் தொடுத்துள்ளது. கொலை வழக்கு விசாரணை என்று சொல்லிக் கொண்டுபழம் பெருமை பெற்ற சங்கர மடத்தின் பெயரை நாறச் செய்ய தமிழக அரசு முயல்கிறது.
மடாதிபதிக்கு எதிராக வாக்குமூலம் தருமாறு மடத்தின் நிர்வாகிகளை தமிழக போலீசார் துன்புறுத்தி வருகின்றனர். வேறு சில நிர்வாகிகளைபல வழிகளிலும் விலைக்கு வாங்கி சங்கராச்சாரியாருக்கு எதிராக வாக்குமூலம் பெற முயற்சிக்கின்றனர்.
இதை பிரதமர் தடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வருடன் பிரதமர் பேச வேண்டும்.
ஜெயந்திரர் கிரிமினல் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் அவ்வளவு தான். இதனால் அவரை வேலூர் சிறையில் இருந்து மாற்றி தனிபங்களாவில் தங்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்போது பேசிய வாஜ்பாயும் அத்வானியும் ஜெயேந்திரருக்கு உரிய மரியாதையும், மனிதாபிமான அணுகுமுறையும் கிடைக்கச் செய்யமத்திய அரசு வழி செய்ய வேண்டும் என்றனர்.
இந்தத் தலைவர்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்களும் பிரதமரைச் சந்தித்தனர். அப்போது பிரதமருடன் உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இச் சந்திப்பின்போது பேசிய மன்மோகன் சிங், சங்கராச்சாரியாரை உரிய மரியாதையுடன் நடத்துமாறு நான்முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார். மேலும் தனக்கு ஜெயலலிதா எழுதிய பதில் கடிதத்தையும்பிரதமர் படித்துக் காட்டினார்.
அதில் ஜெயேந்திரருக்கு உரிய மரியாதையும், வேண்டிய மருத்துவ வசதியும், பிற வசதிகளும் சிறையில் வழங்கப்பட்டுள்ள எனஜெயலலிதா கூறியிருப்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அப்போது பேசிய வாஜ்பாய், உறுதிமொழி கொடுப்பது என்பது வேறு. அதை நடைமுறையில் அமுலாக்குவது என்பது வேறு. கடிதத்தில்ஜெயலலிதாவால் உறுதி தரப்பட்டபடி சிறையில் ஜெயேந்திரர் நடத்தப்படவில்லை என்பதை எங்கள் எம்.பிக்கள் குழு வேலூர் சிறையில்சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்தபோது அறிந்து கொள்ள முடிந்தது என்றார்.
இதையடுத்துப் பேசிய மன்மோகன் சிங், இந்த விஷயத்தில் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு என்னால் முடிந்ததை நான் செய்வேன் என்றார்.
-
குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. இந்த 3 வேலைகளை முடிக்க ஒரே நாள்தான் இருக்கு! தமிழக அரசு அதிரடி -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்!












Click it and Unblock the Notifications