போதையில் மனைவியை கொன்ற கணவன்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே கஞ்சா போதையில் கட்டிய மனைவியை கம்பால் அடித்துக் கொன்றார்கணவர். அப்படியும் போதை தெளியாமல் சாலையில் சென்றவர்களையும் அடித்த அந்த கொடூர மனிதரைபொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
ஈரோடு மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். பால் வியாபாரம் செய்து வருகிறார். அவரதுமனைவி ஜானகி. அருணாச்சலத்திற்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
அடிக்கடி கஞ்சா புகைத்து விட்டு மனைவியை அடித்து உதைப்பது இவரது வழக்கம். இந் நிலையில் வழக்கம்போலகஞ்சா அடித்து விட்டு வந்த அருணாச்சலம், மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கோபமடைந்த ஜானகி,அருணாச்சலத்தைத் திட்டியுள்ளார்.
மனைவி திட்டியதால் வெகுண்டு எழுந்த அருணாச்சலம் வீட்டில் இருந்த மரக் கம்பை எடுத்து மனைவியைதாறுமாறாக அடித்துள்ளார். உயிர் தப்பிக்க வெளியே ஓடி வந்தார் ஜானகி. அப்படியும் விடாத அருணாச்சலம்,தெருவில் ஓடிய மனைவியை விரட்டிச் சென்று அடித்துள்ளார்.
இதில் தலையில் அடிபட்டு ஜானகி அந்த இடத்திலேயே பிணமானார். மனைவியைக் கொன்றும் வெறி தணியாதஅருணாச்சலம் தெருவில் போனவர்களையும் அடித்துள்ளார். உடனடியாக பொதுமக்கள் கூடி அருணாச்சலத்தைப்பிடித்து அடித்து உத்ைதனர்.
பின்னர் அவரை காங்கேயம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அருணாச்சலத்தைக் கைது செய்தனர்.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications