அண்ணா பல்கலையில் கேமரா செல்போன்களுக்கு தடை
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கேமராவுடன் கூடிய செல்போன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் செல்போன் கேமரா மூலம் ஒரு மாணவனும், மாணவியும் உடலுறவு கொள்வதை படம் எடுத்துஎம்.எம்.எஸ். மூலம், இணைய தளம் மூலம் அந்தக் காட்சிகளை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.டெல்லி சம்பவம் போலவிரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்கேமராவுடன் கூடிய செல்போன்களுக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது.
வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்பாலகுருசாமி கூறுகையில், இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
கேமராவுடன் கூடிய செல்போன்களைத் தடை செய்துள்ளது அனைவரின் நலனுக்காகவும்தான். இந்தத் தடை உத்தரவு,மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவருக்கும் பொருந்தும். தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
இதேபோன்ற தடையை தங்களது கல்லூரிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள200க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தலைவர்கள், முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்பாலகுருசாமி.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் கோகோ கோலா, பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் சமீபத்தில் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது நாட்டையே பெரும் பரபரப்பில்ஆழ்த்தியுள்ள கேமரா செல்போன் விவகாரத்தைத் தொடர்ந்து அதற்கும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications