போலீஸ் காவலில் மயங்கி விழுந்த அப்பு!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Appuபோலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் அப்பு மயக்கமடைந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவனுக்கு மருத்துவசிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 3 நாட்களாக போலீசின் பிடியில் இருந்த அப்புவை மேலும் 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம்அனுமதியளித்துள்ளது.

முதல் நாள் சரணடைந்தபோது அப்புவிடம் இருந்த உற்சாகம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மிஸ்ஸிங்.இறுக்கமாகவே வந்துவிட்டுப் போனான்.

தங்களது கஸ்டடியில் இருக்கும் அப்புவிடம் ஒரு நாளைக்கு 16 முதல் 19 மணி நேரம் வரை போலீசார் விசாரணை நடத்துவதாகக்கூறப்படுகிறது. அதிகபட்சம் 6 மணி நேரமே தூங்க அனுமதிக்கப்படுகிறான். பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஷிப்டுமுறையில் வந்து பல மணி நேரம் தொடர் விசாரணை நடத்துகிறது.

சாப்பாட்டு விஷயத்தில் அப்புவுக்கு போலீசார் எந்தக் குறையும் வைக்கவில்லை. காஞ்சிபுரம் சரவண பவனில் இருந்து காலை,பகல், இரவு உணவு சுடச்சுட தருவித்துத் தரப்படுகிறது. உணவை மப்டியில் செல்லும் போலீசார் வாங்கி வருகின்றனர். ஒரேபோலீசே செல்லாமல் மாறி மாறிச் சென்று உணவு வாங்கி வருகின்றனர்.

அப்புவுக்கு தரப்படும் முன் அந்த உணவை அதிகாரிகள் சாப்பிட்டு பரிசோதிக்கின்றனர்.

தொடர் விசாரணைகளால் மிகவும் களைப்படைந்த அப்பு ஒரு முறை மயங்கி விழ, உடனே மருத்துவர்கள் அழைக்கப்பட்டுசிகிச்சை தரப்பட்டுள்ளது. பிளட் பிரஷ்ஷர் மற்றும் சர்க்கரை நோயால் அப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் அவனுக்குத் தேவையானமருந்துகள் வாங்கி வந்துத் தரப்படுகின்றன.

காலை மற்றும் மாலையில் காற்றோட்டம் நிறைந்த காட்டு பங்களாவின் வராண்டாவில் சிறிது நேரம் தனியே அமர்ந்துகொள்ளவும் அப்புவுக்கு அனுமதி தரப்படுகிறது. விசாரணை தான் மிகக் கடுமையாக உள்ளதே தவிர அப்பு நன்றாகவேகவனிக்கப்படுவதாகவும் முரட்டுத்தனம் எதையும் போலீசார் இதுவரை காட்டவில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

ஆனால், சித்தூரில் அப்புவைக் கைது செய்ய சென்ற படையிடம் இருந்து அவன் தப்பியோட முயன்றபோது அவனை துப்பாக்கிமுனையில் தான் போலீசார் வளைத்துப் பிடித்தனர். அப்போது அப்புவின் வாயில் துப்பாக்கியை நுழைத்த எஸ்.பி. பிரேம்குமார்கடுமையாக அவனை மிகக் கடுமையாக எச்சரித்ததாகத் தெரிகிறது.

அதிலிருந்து பிரேம்குமாரைக் கண்டால் பொட்டிப் பாம்பாக மாறிவிட்ட அப்பு, அவரிடம் விசாரணையில் நன்றாகவேஒத்துழைத்து வருகிறான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+