இந்தி: கருணாநிதிக்கு நெஞ்சு பொறுக்கவில்லை
சென்னை:
1938ம் ஆண்டு முதல் கடந்த 66 ஆண்டுகளாக தமிழ் மொழி காத்திடும் சிப்பாயாக விளங்கும் திமுக, இந்தியைத்திணிக்க முயல்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறுவதைப் பொறுக்க முடியவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய சாலை காங்கிரஸ் என்ற அமைப்புதான் தேசிய நெடுஞ்சாலைகளில்வைக்கப்டும் கிலோமீட்டர் கற்களில் இந்தியில் பெயர் எழுத உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலையிட்டு தமிழகத்தில் தமிழிலும் பெயர்களை இடம் பெறச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதன்படி தமிழிலிலும் பெயர்கள் இடம் பெற்று வருகின்றன.
இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த 2003ம் ஆண்டே, திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் மத்திய அமைச்சர்பி.சி.கந்தூரியைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். நானும் ஒரு மாத ஏட்டில் எழுதிய கட்டுரையில்,கிலோமீட்டர் கற்களில் இந்தியில் பெயர் எழுதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
கடந்த 1938ம் ஆண்டு முதல் 66 ஆண்டுகளாக இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து திமுகவைச் சேர்ந்தபல்லாயிரக்கணக்கானோர் சிறை சென்றுள்ளனர், பல நூறு பேர் மாண்டுள்ளனர். தமிழக் காக்கும் சிப்பாயாக திமுகவிளங்கி வருகிறது.
அப்படிப்பட்ட திமுகவை, இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறது என்று வசை பாடுவதைப் பார்க்கும்போது, நெஞ்சுபொறுக்குதில்லையே என்று பாரதி பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது என்று கூறியுள்ளார் அவர்.
-
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
22 வயதில் அகால மரணம் அடைந்த தமிழ் சீரியல் நடிகை.. வளர்ந்து வந்த நேரத்தில் இப்படியா நடக்கணும்? -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications