முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மரணம்
டெல்லி:
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த 9ம் தேதி டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் ராவ். இதையடுத்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் அவரது உடல் நிலை கடந்த வாரம் கொஞ்சம்தேறியது.
அப்போது தன்னைச் சந்தித்த ஜனாதிபதி கலாம் உள்ளிட்டோருடன் ராவால் பேச முடிந்தது.
தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த ராவுக்கு இன்று பிற்பகல் 2.40 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து அவர் மரணமடைந்தார்.
இத் தகவலை அவரது உதவியாளர் சேத்தன் சர்மா தெரிவித்தார். ராவின் மரணத்தின்போது அவரது மகன் பிரபாகர் ராவ் அருகில்இருந்தார். ராவின் மரணத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.
மறைந்த ராவுக்கு 3 மகன்களும் 5 மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகனான ரங்ரா ராவ் ஆந்திர மாநில அமைச்சராக உள்ளார்.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த ராவ், தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா எம்.பிக்களுக்கு லஞ்சம் தந்தார். மேலும் பல சிறிய கட்சிகளை உடைத்து பதவியைக் காப்பாற்றிக் கொண்டார். இது தொடர்பானவழக்குகளில் பின்னர் சிக்கினார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications