ஜெயேந்திரர் சொன்னார்.. கதையை முடித்தோம்: ரவி
சென்னை:
ஜெயேந்திரர் சொன்னதால் தான் கொலை செய்தோம் என போலீசாரிடம் ரவி சுப்பிரமணியம் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
நக்கீரன் நாளிதழுக்கு தனது மறைவிடத்தில் இருந்து ரவி தந்துள்ள தொலைபேசி பேட்டி:
செப்டம்பர் 1ம் தேதி சங்கராச்சாரியார் கூப்பிட்டார். அப்புவுடன் நானும் போனேன். சங்கரராமன் தொல்லை தந்து வர்றான், அவனைவிடக் கூடாது என்றார்.
இதையடுத்து இதை நாங்கள் கவனிப்பதாக சொல்லிவிட்டு சங்கரராமனின் அட்ரஸ் கேட்டோம். அப்போ சங்கரராமனே தனது சொந்தபெயரில் அனுப்பியிருந்த இறுதி எச்சரிக்கை கடிதத்தை எடுத்த சங்கராச்சாரியார், அதில் அனுப்புனர் முகவரி இருந்த பகுதியை மட்டும்கிழித்து எங்களிடம் தந்தார். அதிலேயே சங்கரராமன் வீட்டு போன் நம்பரையும் எழுதிக் கொடுத்தார்.
2ம் தேதி மறுபடியும் மடத்துக்குப் போனோம். அவர் பக்கத்தில் இருந்த பெட்டியைத் திறந்து ரூ. 10 லட்சத்தை எடுத்து எங்களிடம் தந்தார்சங்கராச்சாரியார்.
இதன் பின்னால் வெளியே வந்து கொலையை எப்படி செய்வது என்று ரிகர்சல் பார்த்தோம். 3ம் தேதி சங்கரராமனை திட்டமிட்டபடிமுட்டிச்சுட்டோம். சங்கராச்சாரியார் சொன்னதால தான் இந்தக் கொலையை செய்தோம்.
இவ்வாறு கூறியிருக்கிறான் ரவி சுப்பிரமணியம்.
ரவியின் தற்கொலைக் கடிதம்!!:
இதற்கிடையே காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமாருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது அந்த கடிதத்தை ரவி சுப்பிரமணியம் எழுதியிருப்பதாகக்கூறப்பட்டுள்ளது.
அதில்,
அப்பு சரண் அடைந்துள்ளார். சங்கரராமன் கொலை தொடர்பாக பல தகவல்களை போலீஸாரிடம் நான் தெரிவிப்பேன். இதுவரைசொகுசாக வாழ்ந்து விட்டு இனி நான் சிறையில் அடைப்பட்டு இருப்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. தற்கொலை செய்து என்உயிரை விடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்று ரவியே கூறுவது போல எழுதப்பட்டுள்ளது.
கடிதத்தில் இருக்கும் தபால் முத்திரை மூலம் போபாலில் இருந்து இக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
ரவி சுப்பிரமணியம் தங்கள் கஸ்டடியில் இருப்பதை இதுவரை உறுதி செய்யாமல் இருந்து வரும் போலீசார், இந்தத் தற்கொலை மிரட்டல்கடித விவரத்தை மட்டும் வெளியில் கசிய விட்டுள்ளனர். மேலும் போபாலுக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதனால் ரவி விஷயத்தில் குழப்பமோ குழப்பம் நிலவுகிறது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications