ஜெயலட்சுமி: நெல்லையில் சிபிஐ விசாரணை
சிவகாசி:
ஜெயலட்சுமிக்கு எதிராக 300 பக்க ஆதார ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளதாக ஏட்டையா கண்ணன் தெரிவித்தார்.
போலீஸ் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் ஜெயலட்சுமி வீட்டில் தோட்டக்காரர் மாதிரி வேலை பார்த்து வந்த இந்த ஏட்டு கண்ணன்,பின்னாளில் ஜெயலட்சுமியை மிரட்டியே பலவந்தமாக உடலுறவு கொண்டதாக புகார் உள்ளது.
இது தொடர்பாக இவரிடம் சிபிஐ விசாரித்து வருகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கும் இந்தஏட்டையாசிவகாசி நீதித்துறை நடுவர் மன்றத்தில் கையெழுத்திட வந்தபோது நிருபர்களிடம் கூறியதாவது:
தனது குடும்பத்தாருடன் தொடர்பு இல்லை என ஜெயலட்சுமி கூறியுள்ளார். ஆனால் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கானஆதாரங்களையும், ஜெயலட்சுமி மீது எந்தெந்த காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும், அவர் செய்தமோசடிகளுக்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளேன்.
அதோடு அவரது குடும்பத்தினர் செய்த மோசடிகள் உட்பட மேலும் பல ஆதாரங்களை மொத்தம் 300 பக்க அளவில் சிபிஐயிடம்கொடுத்துள்ளேன் என்றார்.
உறவினரிடம் விசாரணை:
இதற்கிடையே ஜெயலட்சுமியின் உறவினர் நாராயணசாமியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மதுரையில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு நாராயணசாமி வருவதாகக் கூறப்பட்டது. அதனால் அழகிரிசாமியின் (ஜெயலட்சுமியின்தந்தை) வழக்கறிஞர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் அங்கு வந்திருந்தனர்.
ஆனால், நாராயணசாமி வேறொரு இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். இதேபோல் நெல்லையிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தி வருகின்றனர்.
ஜெயலட்சுமியுடனான மோதல் காரணமாக அவர் மீது திருநெல்வேலி போலீசை விட்டு விபச்சார வழக்கு போட வைத்தார் எஸ்பிராஜசேகர் என்பது நினைவுகூறத்தக்கது. அப்போது காவல் நிலைய செல்லிலேயே வைத்து தன்னை இன்ஸ்பெக்டர் ஒருவர் பலாத்காரம்செய்ததாகவும் ஜெயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நெல்லையில் சிபிஐ விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications