ஜெ. முன் தீக்குளிக்க முயற்சி
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 17வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் முன்பு அதிமுகவைச் சேர்ந்த தந்தையும் மகனும் தீக்குளிக்க முயற்சித்தனர்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 17வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்றுகாலை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்திற்கு முதல்வர் ஜெயலலிதா சென்று மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் நினைவு தின உறுதிமொழியை ஏற்க ஜெயலலிதா வந்தார். அப்போது மேடைக்கருகே அமர்ந்திருந்த அதிமுகவைச் சேர்ந்தஒரு தந்தையும், மகனும் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை தங்கள் மீது கவிழ்த்து தீக்குளிக்க முயற்சித்தனர்.
போலீஸார் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் அதிமுக கொடிகளைவைத்திருந்தனர். அவர்கள் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு கட்சியின் அவைத் தலைவர் பொன்னையன், நினைவு தின உறுதிமொழியைவாசிக்க ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் திருப்பிக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
உறுதிமொழி விவரம் வருமாறு:
ஜெயலலிதாவின் புனித தலைமையில் அகிலத்தின் ஒப்பற்ற பேரியக்கமாம் அதிமுகவை கட்டிக் காப்போம். சாதி, மோதல்கள் இல்லாதசமத்துவ சமுதாயத்தை எம்ஜிஆர் வழியில் கட்டிக் காப்போம்.
நினைவாற்றலில் நெப்போலியனாய், அறிவாற்றலில் ஒளவை பெருமாட்டியாய், கனிவில் பெரியாராய், பணிவில் அண்ணாவாய்,மனிதாபிமானத்தில் எம்ஜிஆராய் விளங்கும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சிக்கு அரணாக இருப்போம்.
நாட்டின் இறையாண்மையைக் காத்து செந்தமிழ் காப்பதில் முன்நிற்கும் சிங்கத்தலைவியின் புகழ் கொடியை எங்கும் ஏந்தி இசைபாடுவோம்என்று கூறப்பட்டது. அதன் பின்னர் 2 நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேபோல, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சேலத்தில் மேயர் சுரேஷ்குமார் தலைமையில்அதிமுகவினர் மெளன ஊர்வலம் நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications