கடலுக்குள் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கதி என்ன?
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் மீனவர்கள் தான் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களின் கதி என்னவானது என்று தெரியவில்லை.
கரையில் குப்பங்களில் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த ஆயிரக்கணக்கான குடிசைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதில்நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.
சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் ஏராளமான மீனவர் குடியிருப்புகள், குடிசைகள் உள்ளன. இன்றுகாலை எழுந்த ராட்சத அலைகளில் இந்த குடிசைகள் ஆயிரக்கணக்கில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டன.
சென்னையில் நொச்சிக்குப்பம், குயில் குப்பம், அயோத்தியா குப்பம் என பல்வேறு மீனவர் குடியிருப்புகளில் கடல் நீர் புகுந்து விட்டது.அதே போல நாகப்பட்டிணம், பூம்புகார், பொறையார் ஆகிய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடிசைகளுக்குள் நீர்புகுந்துள்ளது.
அதிகாலை காலை நேரத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால், தூக்கத்திலேயே பல மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடல் நீரில்மூழ்கியுள்ளனர்.
100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று சென்னை மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் கூறப்படுகிறது. இதேபோல, புதுவை,காரைக்கால் பகுதிகளிலும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications