இந்தோனேஷியாவில் பலி 408: தாலாந்தில் 160
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் குறைந்தது 408 பேர் பலியாகியிருக்கக் கூடும் என்றுஅஞ்சப்படுகிறது.
சுமத்ரா தீவுக்கு மேற்கே 1,620 கி.மீ மேற்கே கடலுக்கு அடியில் 40 கி.மீ ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனால் கடலில் மாபெரும்கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சஷ அலைகள் எழுந்தன.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 8.9 என்ற அளவில் பதிவானது. கடந்த 40 ஆண்டுகளில்ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் இதுவாகும். இதையடுத்து பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் பல கடலோர நகரங்களில்கடல் நீர் புகுந்தது. இதனால் தொலைதொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது.
லேன்கக் என்ற கடலோர கிராமம் ஏறக்குறைய அழிந்து விட்டது. அந்தக் கிராமத்தில் பெரும்பாலான சடலங்கள் மரங்களில் சிக்கியுள்ளன.
வடக்கு பைரேயன் மாவட்டத்தில் குறைந்தது 98 பேர் பலியாகினர். இதே போல கிலாங், பாண்டா, லோகசூமாவே ஆகிய இடங்களிலும்பலத்த சேதம் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
இதே போல சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பலர் பலியாகியுள்ளனர். பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் இடிந்துதரைமட்டமாகியுள்ளன.
மலேசியாவில் பினாங் பகுதியில் 6.4 என்ற அளவில் பூகம்பமும் அதைத் தொடர்ந்து கடல் நீரும் புகுந்தது. இதில் பலர் பலியாகியுள்ளனர்.இங்கு நீச்சல் அடித்துக் கொண்டிருந்த பல சுற்றுலாப் பயணிகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியாவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகளில் உள்ள மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கட்டமைப்புகள்,கடலுக்கு அடியிலான கேபிள்கள் அறுந்துவிட்டன. இதனால் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் 160 பேர் பலி:
தாய்லாந்தின் புகேட் தீவில் 160 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்திலும் நில நடுக்கம்:
வங்கதேசத்திலும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. சிட்டகாங்கில் ரிக்டர் அளவில் 7.36 ஆக இந்த நில நடுக்கம் பதிவானது. இதில்யாரேனும் உயிரிழந்தார்களா, காயமடைந்தார்களா என்பது குறித்து உடனடித் தகவல் கிடைக்கவில்லை.
வங்கதேசத்தின் மத்திய, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications