பிரதமருடன் கலாம் பேச்சு; ஜெக்கு கடிதம்
டெல்லி:
கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசினார்.
அப்போது கொந்தளிப்பு காரணமாக ஏற்பட்ட உயிர்ச்சேதம், மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் தமிழகம், ஆந்திரா, பாண்டிச்சேரி மாநில முதல்வர்களுக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநருக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில் கடல் கொந்தளிப்பில் பலியானவர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இத் தகவலை குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வாஜ்பாய் இரங்கல்:
அதேபோல் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் இந்த உயிர்ச் சேதம் தொடர்பாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் பேசுகையில், இது பெரிய விபத்தாகும். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக இப்போதுகணக்கிட முடியாது. இருப்பினும் பெரிய அளவில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications