மத்திய அரசு உதவி: ஜெவிடம் பிரதமர் உறுதி
டெல்லி:
நில நடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றுபிரதமர் மன்மோகன் சிங் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை மன்மோகன் சிங்வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திரா, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் மாநில முதல்வர்களுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார். தமிழகமுதல்வர் ஜெயலலிதாவுடன் பேசிய மன்மோகன் சிங், தனது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளில் ராணுவம், கடற்படை, கடலோரக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கைஅதிகமாக இருப்பதாகவும் ஜெயலலிதா பிரதமரிடம் தெரிவித்தார்.
மேலும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வீடிழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு வைக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார். அதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிகாக்க வேண்டும் என்றும் பொதுமக்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விடுமாறு மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், தயாநிதி மாறன்ஆகியோரை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
சேதம் குறித்து முழுத் தகவல்கள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிற்பகல் 2 மணிக்குச்செல்லவிருப்பதாகவும் மணிசங்கர் அய்யர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சோம்நாத் சாட்டர்ஜி இரங்கல்:
கடல் கொந்தளிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைவதாக மக்களவை சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். அதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications