1,000 பேர் பலி: மத்திய அரசு
டெல்லி:
நிலநடுக்கம் மற்றும் கடல் நீர் புகுந்ததால் தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகளில் சுமார் 1,000 பேர் பலியாகிவிட்டதாக மத்தியஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று அவசரகால நிவாரணக் குழுவின் கூட்டத்தைக் கூட்டிய பாட்டீல் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகம் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
அடுத்தபடியாக ஆந்திராவில் 200 பேர் பலியாகியுள்ளனர். அந்தமானில் 14 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வருகிறது. ஆனால்,அந்தமான்-நிகோபார் தீவுகளுடனான தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டுவிட்டதால் முழுமையான விவரம் கிடைக்கவில்லை.
கேரளா மற்றும் மேற்கு வங்கமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தமிழக,ஆந்திர அரசுகள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும் என்றார் பாட்டீல்.
உதவ முன் வரும் குஜராத்:
இதற்கிடையே பல முறை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் இப்போது நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ முன் வந்துள்ளது.
தன்னிடம் உள்ள மீட்புக் கருவிகள், நிவாரணப் பொருட்களை இந்த மாநிலங்களுக்கு குஜராத் அரசு அனுப்பி வைத்துள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications