சென்னையை பயமுறுத்திய சூறாவளி
சென்னை:
![]() |
சென்னை நகரின் சில பகுதிகளில் இன்று திடீரென்று பலத்த வேகத்துடன் சூறாவளிக் காற்று வீசியதால் பொது மக்கள் பீதியடைந்தனர்.
கடல் கொந்தளிப்பினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தும், அதிர்ச்சியிலிருந்தும் இன்னும் மீளாத சென்னை மக்களுக்கு இன்று புதிய அதிர்ச்சிஏற்பட்டது.
இன்று பிற்பகலில் நகரின் சில பகுதிகளில் பலத்த வேகத்துடன் சூறாவளிக் காற்று வீசியது. வானம் இருண்டு காணப்பட்டது. இதனால்பொதுமக்கள் பீதியடைந்தனர்.
நேற்று கடல் கொந்தளிப்பு போல இன்று சூறாவளி வந்து அழிக்கப் போகிறதோ என்ற பீதியில் மக்கள் உறைந்தனர். இருப்பினும் சிறிதுநேரத்தில் காற்றின் வேகம் குறைந்தது. ஆனால் மழை வருவது போல வானம் இருண்டு காணப்படுகிறது.
நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
இந் நிலையில் கடல் கொந்தளிப்பால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டனம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுறைஅளிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டனம் நகரம் உள்பட நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடல் நீரில் மிதக்கின்றன. மாவட்டமே மயானம் போலகாட்சி அளிக்கிறது. எங்கு பார்த்தாலும் அழுகையும், சோகம் தலைவிரித்தாடுகிறது.
எங்கு பார்த்தாலும் சடலங்களின் ஊர்வலங்கள் காணப்படுகின்றன. இதனால் நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications