குளச்சல் கடலில் மிதக்கும் உடல்கள்!!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

Kanyakumari
கன்னியாகுமரியின் குளச்சல் கடலில் இன்றும் பல உடல்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.

மாநிலத்தில் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் 625 பேர் பலியானதாக கணக்குசொல்லப்படுகிறது. ஆனால், சுனாமி தாக்கி 3 நாட்களாகிவிட்ட பின்னரும் கடலில் பல உடல்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

கிருஸ்துவ மக்களே பெரும்பாலும் நிறைந்த குளச்சல் பகுதியில் முதல் நாள் கிருஸ்துமஸ் கொண்டாடிவிட்டு ஞாயிற்றுக்கிழமையன்று அதேஉடைகளுன் விளையாடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான குட்டிக் குழந்தைகளை பேரலைகள் வந்து இழுத்துச் சென்றுள்ளன.

Women crying for victims in Kulachal
வழக்கமாக கடலுக்குள் கிடக்கும் பிணங்கள் மூன்றவது நாளில் கரையொதுங்கிவிடும். ஆனால், இம்முறையோ தொடர்ந்து அந்த உடல்கள்கடலில் தான் மிதக்கின்றன. அவை கரை வந்சு சேரவில்லை. கடல் தன் கருணையை ஒட்டுமொத்தமாக இழந்துவிட்டது என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவர் நெஞ்சில் அடித்தபடி.

என்னைப் போன்ற மூதாட்டிகளை விட்டுவிட்டு சின்னப் பிள்ளைகளை கடல் முழுக்கியது ஏனோ என்று சொல்லிவிட்டு மண்ணில் விழுந்துபுரண்டு அழுகிறார் ஒரு பாட்டி.

கடல் அலைகளால் பாதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஓடி வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

வீடுகளில் முடிந்தவரை கூடுதலாக சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் வீட்டு ஆண்கள், குழந்தைகள் மூலம் அனுப்பி வைத்துவருகின்றனர் இப் பகுதி தாய்மார்கள்.

தங்களுக்கு உணவும் மாற்று உடைகளும் எடுத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் நடந்து வருபவர்களை கட்டிப் பிடித்து அழுகின்றனர்பாதிக்கப்பட்ட மக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+