சென்னை, நீலகிரியில் இன்று நில நடுக்கம்
சென்னை:
சென்னை, நீலகிரி, கேரளத்தில் இன்று சில இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டுஅலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்தோனேஷியாவில் அருகே கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மாபெரும் நில நடுக்கத்தின் தொடர்ச்சி தான் இதுஎன்றும், இதனால் பெரிய சேதம் ஏதும் ஏற்படாது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காலையிலும் நீலகிரி, கேரளத்தில் வயநாடு, பாலக்காடு, மனந்தவாடி பகுதியில் பகல் 12 மணியளவிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேலில் 2.0 என்ற அளவுக்கு இந்த அதிர்வு பதிவாகியுள்ளது.
இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Aftershocks எனப்படும் இந்த நில அதிர்வுகள் மேலும் சில நாட்கள் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும் இந்த அதிர்வுகளைத் தொடர்ந்து கடலின் அலைகளும் மிக அதிகமாகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும் எனவும் 2.5மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது.
இந்த நில அதிர்வுகளால் பெரிய சேதம் விளையாது என்றாலும் பலமில்லாத கட்டடங்களில் யாரும் வசிக்க வேண்டாம் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளனர்.
காலியாகக் கிடக்கும் மெரீனா:
![]() |
இந்தச் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது.













Click it and Unblock the Notifications