பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.153 கோடியில் நிவாரணம்
சென்னை:
![]() |
கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.153.37 கோடி செலவில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளின் விவரம் வருமாறு:
பாதிப்பிற்குள்ளான ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு வேட்டி, ஒரு சேலை, 60 கிலோ அரிசி, 2 போர்வைகள், 3 லிட்டர்மண்ணெண்ணெய் வழங்கப்படும். மேலும் ஸ்டவ், பாத்திரங்கள் வாங்க ரூ. 1,000, உணவுப் பொருட்கள் வாங்க ரூ.1,000, தாற்காலிகமாககுடிசை அமைத்துக் கொள்ள ரூ.2,000 என மொத்தம் ரூ.4,912 மதிப்பில் உதவிகள் வழங்கப்படும்.
இதற்காக ரூ.29.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு வலையை மாற்ற வல்லம் ஒன்றுக்கு ரூ.20,000 வீதம் மொத்தம் 10,000 வல்லங்களுக்கு ரூ.20 கோடி வழங்கப்படும்.இதேபோல் கட்டுமரம் ஒன்றுக்கு ரூ.10,000 வீதம் 20,000 கட்டுமரங்களுக்கு ரூ.20 கோடி தரப்படும்.
வல்லங்களை பழுதுபார்க்க வல்லம் ஒன்றுக்கு ரூ.15,000 வீதம் 10,000 வல்லங்களுக்கு ரூ.15 கோடியும், கட்டுமரங்களைப் பழுது பார்க்ககட்டுமரம் ஒன்றுக்கு ரூ.5,000 வீதம் 20,000 கட்டுமரங்களுக்கு ரூ.10 கோடியும் வழங்கப்படும்.
இதற்காக மொத்தம் ரூ.65 கோடி செலவிடப்படும். இதுதவிர சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய ரூ.20 கோடி ஒதுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உடனடி நிவாரணப் பணிகளாகும்.
மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என முன்பு அறிவித்திருந்தேன். ஆனால் அது தற்போதுமாற்றப்பட்டு இறந்த ஒவ்வொருவருக்கும் ரூ. 1லட்சம் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். (அதாவது ஒரு குடும்பத்தில் 2பேர் இறந்திருந்தால் ரூ. 2 லட்சம் வழங்கப்படும்).
சுனாமி அலைகளின் தாக்குதல் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து வெகு வேகமாக மக்கள் மீளும் வகையில், நிவாரணத் திட்டங்களைசெயல்படுத்தவுள்ளேன்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நானே சென்று இன்று உதவிகளை வழங்குகிறேன்.
கடைகள், வாகனங்கள், இதர உடைமைகளை இழந்தவர்களுக்கும் அரசு உதவும். உடனடிப் பணிகள் நிறைவடைந்தவுடன் நிரந்தரப்பணிகள் மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படும். அத்திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி தேவைப்படும். இது தொடர்பாக பிரதமர்மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரிடம் பேசியுள்ளேன்.
சாவு எண்ணிக்கை 3,925:
தமிழகத்தில் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 3,925 பேர் (இது அரசு சொல்லும் கணக்கு) இறந்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 2,414 பேரும், கன்னியாகுமரியில் 665 பேரும், கடலூரில் 486 பேரும், சென்னையில் 188 பேரும்,காஞ்சிபுரத்தில் 108 பேரும், விழுப்புரத்தில் 42 பேரும், திருவள்ளூரில் 12 பேரும், திருநெல்வேலியில் 4 பேரும், தூத்துக்குடியில் 3பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும், தஞ்சாவூரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 344 பேரைக் காணவில்லை என்றார் ஜெயலலிதா.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெ. நாளை குமரி பயணம்:
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா நாளை கன்னியாகுமரி மாவடத்திற்கு மீண்டும் செல்கிறார். அந்த மாவட்டத்தில் நிவாரணப் பணிகள்சரிவர நடைபெறவில்லை, மருந்துகள் போதிய அளவு வழங்கபடவில்லை என்று வந்த புகாரையடுத்து அவர் அங்கு செல்கிறார்.
விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோயில் வருகிறார். பின்னர் காரில்பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்கிறார்.













Click it and Unblock the Notifications