ஆசிரியர்கள் ரூ. 10 கோடி நிதியுதவி
சென்னை:
![]() |
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ. 10 கோடியை முதலமைச்சர்பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்சென்னையில் இன்று நடந்தது.
கூட்டத்திற்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாநிலம்முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் தங்களதுஒரு நாள் ஊதியமான ரூ. 10 கோடியை கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு,முதலமைைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், உத்தராஞ்சல் உதவி:
அதே போல கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.2 கோடியும், அந்தமானுக்கு ரூ.1 கோடியும் ராஜஸ்தான் அரசு நிவாரண நிதிவழங்கியுள்ளது.
இது தொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிவாரணப் பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.2 கோடி நிதியும், அந்தமானுக்கு ரூ.1 கோடி நிதியும்ராஜஸ்தான் அரசு வழங்குகிறது.
அதோடு போர்வைகள், துணிகள் மற்றும் அன்றாட வாழ்க்கைகளுக்குத் தேவையான பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், தற்போது சட்டமன்ற உறுப்பினருமான அசோக் கேலட் தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ளார் என்றுகூறினார்.
உத்தராஞ்சல் ஆளுநர் ரூ.1 லட்சம் நிதி:
இதற்கிடையே உத்தராஞ்சல் முதல்வர் என்.டி.திவாரி ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இதேபோல் உத்தராஞ்சல் சுதர்ஷன் அகர்வால் தனிப்பட்ட முறையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாகஅறிவித்துள்ளார். தங்களால் இயன்ற அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு உத்தராஞ்சல் மாநில மக்களுக்கும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.













Click it and Unblock the Notifications