அந்தமானில் இருந்து தப்பி வந்த தமிழர்கள்
போர்ட்பிளேர்:
![]() |
அந்தமான் மற்றும் இந்தோனேஷியாவை நில அதிர்வுகள் இன்றும் தொடர்ந்து உலுக்கி வருகின்றன.
இன்று காலை 4 முறை இங்கு நில நடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலை காலை 4.26 மணியளவில் லிட்டில் நிகோபார் தீவுக்கு அருகில் ரிக்டர்அளவுகோலில் 5.2 என்ற அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது.
இதைத் தொடர்ந்து 4.44 மணிக்கு கிரேட் நிகோபார் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷிய நேரப்படி சுமத்ரா தீவுக்கு அருகே நள்ளிரவு 2.43 மணிக்கும், காலை 634க்கும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமானில் இருந்து தப்பிய தமிழர்கள்:
இதற்கிடையே அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து விமானப் படை மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மூலம் தப்பி வந்த 340தமிழர்கள் சென்னை வந்துள்ளனர்.
![]() |
அந்தமானில் வசித்து வந்த இவர்களது வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பலர் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர்.
இவர்களில் 140 பேர் அவர்களது சொந்த ஊரான மதுரை, தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் சென்னை மாநகராட்சியின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.














Click it and Unblock the Notifications