நாகை, குமரி கலெக்டர்களின் இயலாமை; பொதுமக்கள் குமுறல்!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம் & கன்னியாகுமரி:

The Scene in Coastal village

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்கள் நிவாரணப் பணிகளை சரி வர மேற்கொள்ள முடியாமல் திணறிவருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உரிய நிவாரணம் கிடைக்காமல் பரிதவித்துப் போயுள்ளனர்.

கடல் கொந்தளிப்பினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டனம், கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும்நிவாரணப் பணிகள் மிகவும் மோசமாகவே உள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையே இன்னும் தொடங்கவில்லை.

கடல் கொந்தளிப்பு நடந்து 4 நாட்களாகியும் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்தைத் தவிர வேறு எந்தநிவாரணமும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு மாற்ற உடையில்லை.

அக்கப் பக்கத்து ஊர்க்காரர்கள் ஓரளவுக்கு உதவினாலும் கூட ஒரு அரசு செய்ய முடிகிற பெரிய அளவிலான நிவாரணத்தை பொதுமக்களால் செய்ய முடியவில்லை.

இதனால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த் மீது மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாககுளச்சல், முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதுல் ஆனந்த் இன்னும் வரவேயில்லை.

கல்யாண மண்டபங்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்களை மட்டுமே அதுல் ஆனந்த் சந்தித்து குறைகளைக் கேட்டு செல்கிறார்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரைகளில் ஒதுங்கிக் கிடக்கும் பிணங்களை அகற்றும் பணியும் சரிவர நடக்கவில்லை. இதனால் அவை அப்படியே கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல, நாகப்பட்டிணம் மாவட்ட கலெக்டர் வீர சண்முகமணி மீதும் அம்மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசுஅதிகாரிகளை விட தனியார் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள்தான் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் மீட்பு மற்றும் நிவாரணநடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகப்பட்டிணத்தில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு மீட்பு நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன். இவர் இருக்கும் பகுதியில் தான் மீட்புப் பணிகள் ஓரளவுக்கு வேகத்தில் நடக்கின்றன.

இதனால் அந்த நல்ல மனிதரை அப் பகுதி மக்கள் தங்கள் சோகத்திலும் கூட ஒரு வார்த்தை வாழ்த்திவிட்டுச் செல்கின்றனர்.

கும்பகோணம் தீ விபத்து நடந்தபோது ராதாகிருஷ்ணன் அதைக் கையாண்ட விதம் பலராலும் பாராட்டப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+