ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து
சென்னை:
![]() |
சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கடலோரங்களில் உள்ள கிளப்கள், சார்ட்கள் ஆகியவற்றில் இந்த ஆண்டுபுத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கடல் கொந்தளிப்பினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் தங்களால் ஆன உதவிகளை அளித்து வருகின்றனர்.
இந் நிலையில் வருகிற டிசம்பர் 31ம் தேதி வழக்கமாக கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள்இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை நகர் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் புத்தாண்டுக்கொண்டாட்டங்கள் அதிக அளவில் இடம் பெறும்.
இம்முறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு தமிழகமே சோகக் கடலில் மூழ்கியுள்ளதால் சென்னை நகரில் உள்ள முக்கிய நட்சத்திரஹோட்டல்கள் அனைத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் கொந்தளிப்புக்குப் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரமாண்டமான கருப்புத் துணியால் ஆனபேனர்கள் ஹோட்டல்கள் முன்பு தொங்க விடப்பட்டுள்ளன.
இதேபோல, சென்னை புறநகரான கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அனைத்து கிளப்கள், ரிசார்ட்கள் ஆகியவற்றிலும்புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications