இழவு வீட்டில் கொண்டாடி மகிழும் கர்நாடக இசை சபாக்கள்!
சென்னை:
![]() |
சுனாமி தாக்குதலால் உலகமே கவலையும், சோகத்திலும் ஆழ்ந்துள்ள நிலையில் சென்னையில் உள்ள சபாக்களில் டிசம்பர் மாத ஸ்பெஷல்கர்நாடக இசைக் கச்சேரிகள் ஒரு ஷோ கூட தவறாமல் மிக விமரிசையாக நடந்து வருகின்றன.
அதேபோல, தமிழக திரையரங்குகளில் ஒரு திரைப்படக் காட்சி கூட ரத்து செய்யப்படாமல் தொடர்ந்து சினிமாக்கள் திரையிடப்பட்டுவருகின்றன.
சுனாமி அலைகளின் தாக்குதலில் உலகின் ஒரு பகுதி சிதிலமடைந்து, நிலை குலைந்து போயுள்ளது. பல நாடுகளில் பேரழிவுஏற்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, உடமைகளை இழந்து, வீடுகளை இழந்துள்ளனர்.
தமிழகத்தின் கரையோரங்கள் சின்னாபின்னாவாகி லட்சக்கணக்கான மக்கள் அடுத்த வேளை சோத்துக்கும், இருக்கு இடம் இல்லாமலும்தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடுப்பத்தில் பலரை இழந்து தவிக்கின்றனர்.
இவர்களுக்கு உதவி செய்ய மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் நாகை, கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்களில்குவிந்துள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து கூட உதவும் உள்ளங்கள் பல நாகை விரைந்துள்ளன.
வழக்கமாகக் கொண்டாடப்படும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை பல ஹோட்டல்கள், கிளப்கள், சங்கங்கள், தனியார்கள் ரத்து செய்துவிட்டனர்.
ஆனால் சென்னையில் கர்நாடக இசை நகழ்ச்சிகள் மட்டும் தொடர்ந்து தங்கு தடையின்றி வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்பட்டுவருகின்றன. சுனாமி தாக்குதலில் சென்னையும் தப்பவில்லை. இங்கும் 200 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.
ஆனால், இழவு விழுந்த வீட்டில் (சென்னையில்) இருக்கிறோமே என்ற சின்ன உணர்வு கூட இல்லாமல் கச்சேரிகளை நடத்தி ரசிக்கிறதுஇந்தக் கூட்டம்.
![]() |
சென்னையில் உள்ள எந்த சபாவிலும் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படவில்லை. துக்கத்துக்காக ஒரு காட்சி கூடரத்தாகவில்லை. இசை கச்சேரிகள், நகைச்சுவை நாடகங்கள் என சென்னை சபாக்கள் அமர்க்களமாக மார்கழி மாதத்தைக் கொண்டாடிவருகின்றன.
நம் ஊர் திரையரங்குகளையும் சும்மா சொல்லக் கூடாது. பேருக்கு ஒரு காட்சியைக் கூட ரத்து செய்யாமல் தொடர்ந்து சினிமாக்களைதிரையிட்டு வருகின்றன. திரையுலகமே ஒரு நாள் தனது பணிகளை நிறுத்தி இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தியது. ஆனால் அன்றும் கூடதிரையரங்குகள் படங்களை திரையிடத் தவறவில்லை.
இதே மாதிரி தான் டிவிக்களிலும் வழக்கமான ஆடல், பாடல்கள் தொடர்கின்றன.














Click it and Unblock the Notifications