அட்டன்பரோ தப்பினார்: குடும்பத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
காந்தி படத்தை தயாரித்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் பேத்தி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் தாய்லாந்தில் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பில் பலியானார்கள்.
முதலில் அட்டன்பரோவும் பலியானதாக தாய்லாந்தில் இருந்து தகவல்கள் வந்தன. ஆனால், அவர் லண்டனில் உள்ளார். (அவர் இறந்ததாகநேற்று செய்தி வெளிட்டுவிட்டோம். தவறுக்கு மன்னிக்கவும்)
தாய்லாந்து நாட்டில் புக்கெட் சுற்றுலாத் தளத்தில் இருந்த அவரது பேத்தி லூசி (14) இறந்துவிட்டார். அவரது மகள் ஜேன், அவரது கணவர்,மற்றும் கணவரின் தாயார் ஹாலண்ட் ஆகியோரைக் காணவில்லை. அவர்களும் பலியாகிவிட்டதாகவே தெரிகிறது.
ஜெட் லீ உயிர் தப்பினார்:
அதேபோல் ஹாங்காங்கில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஜெட் லீயும் அவரது மகளும் சுனாமி அலைகளில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினர். தப்பியோடியபோது ஜெட் லீக்கு காயம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications