கடலூர் சிறையில் ரவி சுப்பிரமணியம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் :

Raviசங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து கடலூர் மத்தியசிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

சங்கரராமன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவி சுப்பிரமணியம் கடந்த 26ம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டார்.நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காஞ்சிபுரம் நீதிமன்றம்அனுமதியளித்தது.

அதனையடுத்து கடந்த 3 நாட்களாக ரவி சுப்ரமணியத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை நேற்று மாலையுடன்முடிவடைந்ததையடுத்து நேற்று மாலை ரவி சுப்பிரமணியம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி உத்தமராஜன், போலீசார் உங்களை துன்புறுத்தினார்களா, உடலில் காயங்கள் எதுவும் உள்ளதா என்று கேட்டார். அதற்குரவி சுப்பிரமணியம், இல்லை என்று பதிலளித்தார். போலீஸ் காவலில் இருந்த போது உணவு சரியாக வழங்கப்பட்டதா என்ற கேள்விக்குஆம் என்று பதிலளித்தார்.

அதையடுத்து அவரை அடுத்த மாதம் 10ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார். பின்னர் ரவிசுப்பிரமணியம் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதே சிறையில் தான் அப்புவும் அடைக்கப்பட்டுள்ளான்.

அப்பு: சென்னை டாக்டர்கள் சிகிச்சை

இதற்கிடையே நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவுக்கு சிகிச்சைதருவதற்காக சென்னையிலிருந்து மருத்துவக் குழு கடலூர் விரைகிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் 3வது குற்றவாளியான அப்பு தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். போலீஸ்விசாரணைக்குப் பின் கடலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

சிறைக்கு வந்து அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்துஅப்பு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையிலிருந்து ஒரு மருத்தவக் குழு கடலூர் விரைகிறது. இந்தமருத்துவக் குழுவினரும் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+