இந்தோனேஷியா தந்த அவசர தகவல்: கண்டுகொள்ளாத கபில் சிபல்
டெல்லி:
![]() |
இதனால் தான் இவ்வளவு பெரிய உயிர்ச் சேதத்தை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்திய நேரப்படி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே ரிக்டர் ஸ்கேலில் 9.0 என்ற அளவு பிரளயம் போன்ற மிகப் பெரியபூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் உலக நாடுகள் முழுவதும் பதிவானது.
சில நாடுகளில் ரிக்டர் ஸ்கேலில் 8 என்ற அளவிலும், சில இடங்களில் 8.5, 8.9 ஆகவும் பதிவானது. 8 என்ற அளவீடு மிகப் பெரியபூகம்பத்தின் அளவாகும். ரிக்டர் ஸ்கேலைப் பொறுத்தவரை 8.9க்கும் 8.5க்கும் இடையிலான வேறுபாடு வெறும் 0.5 அளவு அதிக சக்திவாய்ந்த பூகம்பம் என்பதல்ல. 32 மடங்கு அதிக சக்தி வாய்ந்த பூகம்பம் என்று பொருள்.
ஆக, ரிக்டர் அளவில் 7க்கு மேல் பூகம்பம் பதிவானால் அது பெரும் சேதத்தை விளைவித்துவிடும். இந் நிலையில் இந்தோனேஷிய கடலில்மாபெரும் பூகம்பம் தாக்கியவுடன் சுனாமி ஏற்படப் போவதை உணர்ந்துவிட்ட இந்தோனேஷிய கடலாராய்ச்சித்துறையினர் உடனே தங்கள்நாட்டு அரசை எச்சரித்துவிட்டு இந்தியாவுக்கும் எச்சரிக்கை விடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால், பூகம்பம் நடந்த இடத்துக்கு மிக அருகில் இருந்ததால் இந்தோனேஷிய அரசு நடவடிக்கை எடுப்பதற்குக் கூட அவகாசம் இல்லாமல்கடல் அலைகள் தரைப் பகுதிகளுக்குள் பாய்ந்துவிட்டன.
ஆனால், இந்தியாவை நோக்கியும் சுனாமி அலைகள் பரவுவதை அறிந்த இந்தோனேஷிய கடலாராய்ச்சித் துறை இந்தியகடலாராய்ச்சித்துறையை தொடர்பு கொள்ள முயன்றுள்ளது.
அதற்குள் சுனாமி தாக்கி இந்தோனேஷியாவின் கடலோரத் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட, இந்தியாவைத் தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்துள்ளனர்.
![]() |
கபில் சிபலின் செல்லுக்கு காலை 6.30 மணியளவில் இந்த எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. உடனே அதை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்குத்தெரிவிக்க கபில் முயன்றுள்ளார். ஆனால், அவர் இதை உடனடியாக பிரதமர் அலுவலகத்துக்கும் உள்துறை, பாதுகாப்புத்துறைக்குத்தெரிவிக்காமல் விட்டுவிட்டதாக் கூறப்படுகிறது.
இதையடுத்த ஒரு மணி நேரத்தில் சுனாமி அலைகள் அந்தமானைத் தாக்கின. இதனால் அங்கும் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டுவிட,இந்தத் தகவலை இந்தியாவுக்குத் தெரிவிக்க முடியாமல் திணறியுள்ளனர் அங்கிருந்த நம் நாட்டு கடற்படையினரும் விமானப்படையினரும். எல்லா இடங்களில் நீர் புகுந்துவிட தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து ஓட வேண்டிய நிலைக்கு அவர்கள்தள்ளப்பட்டன.
இதையடுத்து ஒரு வழியாக கடற்படைக் கப்பல்கள் மூலம் டெல்லிக்கு எச்சரிக்கை வந்துள்ளது. ஆனால், டெல்லி விழித்துக்கொள்ளவில்லை.
இந்தத் தகவலை அறிந்த முன்னாள் ஏர் மார்ஷெல் கிருஷ்ணசாமி டெல்லிக்கு தகவல் சொல்ல நம்பர்களைத் தேடியுள்ளார். அவருக்குஉடனே கையில் சிக்கியது முன்னாள் பா.ஜ.க. மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியின் தொலைபேசி எண் தான்.
அவருக்கு அவசரமாய் தகவல் தர அவர் மத்திய அரசை எச்சரிப்பதற்குள் தமிழகம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுனாமி தாக்கிமுடித்துவிட்டது.
கபில்-பாட்டீல்: மக்களை குழப்பிய அமைச்சர்கள்
இந் நிலையில் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நேற்று காலையில் அறிவிப்பு வெளியிட, அதைபிற்பகலில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையைமாச்சரான கபில் சிபல் மறுத்தார்.
இத்தனைக்கும் இருவரும் சேர்ந்து தான் டெல்லியில் நேற்று அதிகாரிகளின் உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டி சுனாமி சேதம் குறித்து விவாதித்தார்கள்.கூட்டம் முடிந்தவுடன் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொன்னார்கள்.
இதனால் மக்கள் மத்தியில் சுனாமி பற்றிய பீதியை விட பெரும் குழப்பமே மிஞ்சியது.
பாட்டீலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலோரங்களில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வசித்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிலநிமிடங்களிலேயே கடலோரப் பகுதிகள் வெறிச்சோடின.
இந் நிலையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்கும் கருவிகள் உலகின் எந்த நாட்டிலும் இல்லை.
மீண்டும் பூகம்பம் வரும், சுனாமி வரும் என்றெல்லாம் யாராலும் கூற முடியாது. எனவே இந்தியக் கடலோரப் பகுதிகளை சுனாமி மீண்டும் தாக்கும் என்றதகவலை யாரும் நம்ப வேண்டாம், பீதி அடைய வேண்டாம் என்றார்.
அமெரிக்கா கொடுத்த எச்சரிக்கை:
ஆனால், நேற்று மத்திய உள்துறைக்கு சுனாமி தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை வந்தது உண்மைதான் என்று தெரிகிறது. இந்த எச்சரிக்கையைஅனுப்பியது அமெரிக்காவில் உள்ள டெர்ராரிசர்ச் என்ற அமைப்புதான் அனுப்பியுள்ளது.
பெரும் சீரழிவை ஏற்படுத்திய சுனாமி சம்பவத்திற்குப் பிறகும் கூட மத்திய அரசு இந்தப் பிரச்சனை தொடர்பாக ஒருங்கிணைந்து, உருப்படியாகசெயல்படவில்லை என்பது இந்த இரு அம்ைசசர்களின் மாறுபட்ட பேச்சுக்களால் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மத்திய அமைச்சர்கள் செய்த குழப்பத்தால் தமிழகத்தின் கடலோரப் பகுதி மக்கள் நேற்று படாத பாடு பட்டு விட்டனர்.














Click it and Unblock the Notifications