விடுதலைப் புலிகளுக்கு கடும் உயிர் சேதம்: சந்திரிகா
கொழும்பு:
![]() |
சுனாமியால் வட கிழக்குப் பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தமிழர் பகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காமல்போக்கு காட்டி வருகிறது இலங்கை அரசு. இதையடுத்து மீட்புப் பணிகளில் புலிகள் தான் முழு அளவில் இறங்கியுள்ளனர்.
இலங்கைக்கு வரும் நிதியுதவி அரசிடம் வழங்கப்படுவதால் அது தமிழர் பகுதி மீட்புப் பணிகளுக்கு உபயோகமாக இல்லை. இதனால் இந்தநிதியை அரசும், புலிகளும் இணைந்து பயன்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை இலங்கையில் வலுத்து வருகிறது.
மேலும் வட கிழக்குப் பகுதியில் புலிகளாலும், புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சுற்றி ராணுவமும் புதைத்து வைத்துள்ள லட்சணக்கானகண்ணி வெடிகளும் அலையால் அடித்துச் செல்லப்பட்டு பல பகுதிகளிலும் புதைந்துள்ளன.
இதனால் மீட்புப் பணிக்கு வரவும் பல நாட்டினர் அஞ்சுகின்றனர். தப்பித் தவறி கண்ணி வெடியில் சிக்கிக் கொள்ள நேரலாம் என்றஅச்சத்தில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர்.
இந் நிலையில் மீட்புப் பணிகளுக்கு நிதியுதவியும் நிவாரண உதவிகளையும் செய்யுமாறு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே கிழக்குப் பகுதியில் சில இடங்களைப் பார்வையிட்ட பின் அதிபர் சந்திரிகா நிருபர்களிடம் கூறியதாவது:
சுனாமி கடல் அலையால் விடுதலைப் புலிகளுக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. வட கிழக்கில் இருந்த புலிகளின் பெரும்பாலானகடற்படை முகாம்களும் அழிந்துவிட்டன. அங்கு பெரும் உயிர்ச் சேதத்தையும் புலிகள் சந்தித்துள்ளனர்.
இதே போல ராணுவத்துக்கும் அதிகமான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. ராணுவ வாகனங்கள், ஆயுதங்களை இழந்துள்ளோம். சுமார் 10லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,673 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 5,000 பேரைக் காணவில்லை என்றார்.
ராணுவத்திற்கு ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்த விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications