கபில் சிபலை கண்டித்த சோனியா
டெல்லி:
![]() |
கடல் கொந்தளிப்பு குறித்து இந்தோனேஷியா தகவல் தெரிவித்தும் அலட்சியமாக இருந்துவிட்டதாக மத்திய அறிவியல் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அவர்விளக்கமளித்தார்.
இந்தோனேஷியா கடல் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியப் பெருங்கடலில் சுனாமி அலைகள் உருவானதைஇந்தோனேஷிய கடலராய்ச்சித் துறை அதிகாரிகள் கபில் சிபிலிடம் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அது குறித்து கபில் சிபல் அலட்சியமாக இருந்துவிட்டார். எனவே அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உள்துறை அமைச்சகத்துக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லைஎன்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் கபில் சிபலுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டார்.இதனையடுத்து சிவராஜ் பாட்டீல் சோனியாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தார்.
கபில் சிபல் சோனியா காந்தியின் வீட்டுக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தார். இருப்பினும் கபில் சிபலை சோனியா மிகக் கடுமையாகக்கண்டித்ததாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் கபில் சிபலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாஜக பிரச்சினை கிளப்புவதை காங்கிரஸ் வட்டாரங்கள்குறை கூறியுள்ளன. இதை பாஜக அரசியல் ஆக்க முயல்வதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
கபில் சிபல் அலட்சியமாக இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டால் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு













Click it and Unblock the Notifications