கல்பாக்கம்: மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை
![]() |
சென்னை அருகே கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு மின்நிலையத்தின் 2வது அணு உலையில் உற்பத்திப் பணிகள் மீண்டும்தொடங்கின.
சுனாமி தாக்குதலையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அணு உலைகள் மூடப்பட்டன. 2வது உற்பத்தி நிலையம் மூடப்பட்டு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. கல்பாக்கம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் கடல் நீர் புகுந்து விட்டதாலும், சுனாமி மற்றும் நில அதிர்வுகளால்அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளியாகி விடாமல் தடுக்கும் பொருட்டும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந் நிலையில் அணு மின் உற்பத்தியை மீண்டும் தொடங்கலாம் என்று அணு சக்தி முறைப்படுத்தும் ஆணையம் கல்பாக்கம் அணு மின்நிலையத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து 2வது அணு உலையில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகள் நேற்றுகாலை முதல் தொடங்கியது.
நேற்று முதல் பணிகள் தொடங்கினாலும், இன்று காலை முதல் மின் உற்பத்தி முழுமையாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications