சங்கர மட கோ சாலை அகற்றம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சங்கர மடம் சார்பில் நடத்தப்பட்டு வந்த கோ சாலையை (பசுக்கள் பாதுகாப்பு மையம்)அங்கிருந்து மாற்ற தமிழக அரசின் இந்து அற நிலையத்துறை உத்தரவிட்டதால், கோ சாலை இடமாற்றம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலய வளாகத்தில் சங்கர மடம் சார்பில் கோ சாலை நிறுவப்பட்டது. அங்கு 100 பசுக்கள் வரை உள்ளன.இந்த கோ சாலையை அங்கிருந்து அகற்றும்படி சங்கர மடத்திற்கு சமீபத்தில் இந்து அறநிலையத்துறை சங்கர மடத்திற்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கோயிலில் இருந்த கோ சாலை அகற்றப்பட்டு காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கர மடத்திற்குச் சொந்தமானஇடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மாடுகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன.












Click it and Unblock the Notifications