சுனாமி: இரங்கல் கூட்டத்தில் ஆசிரியர் சாவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
![]() |
சேலத்தில் நடந்த சுனாமி இரங்கல் கூட்டத்தில் மிகவும் உருக்கமாக, கண்ணீருடன் கவிதை வாசித்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரடைப்புஏற்பட்டு மரணமடைந்தார்.
சேலத்தைச் சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியரான ஆண்டனி குரூஸ், அப் பகுதியில் நடந்த சுனாமிக்குப் பலியானவர்களுக்கான இரங்கல்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் தான் எழுதிய கவிதைய வாசித்தார். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், கண்ணீருடன் கவிதை வாசித்துக்கொண்டிருந்த குரூஸ் திடீரென மயங்கி விழுந்தார்.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, குரூஸை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குரூஸ்மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குரூஸுக்கு மனைவி, 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.













Click it and Unblock the Notifications