அருணா கொலையில் இருவர் கைது
நெல்லை:
ஆலடி அருணா கொலை வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலடிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா சில நாட்களுக்கு முன்பு 3 பேர் கொண்ட கும்பலால்படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக பாலமுருகன் என்பவர் சென்னையில் சரணடைந்தார். இவரை வருகிற 10ம் தேதி தென்காசி நீதிமன்றத்தில்ஆஜர்ப்படுத்துகிறார்கள். அப்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில்பட்டியைச் சேர்ந்தபசும்பொன் இயக்க தலைவர் வெள்ளைச்சாமியின் செல்போன் நம்பர் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போனில் இருந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இவரை புளியரை செக்போஸ்டில் மடக்கிப்பிடித்த போலீஸார் வேறு ஒரு வழக்கில் கைதுசெய்தனர். பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறி வெள்ளைச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். ஆலடி அருணா வழக்கில்வெள்ளைச்சாமிக்கு முக்கியப் பங்கு உள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.
அதற்கான ஆதாரங்களை போலீஸார் தற்போது சேகரித்து வருகிறார்கள். அதுவரை அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாதுஎன்பதற்காக வேறு வழக்கில் அவரைக் கைது செய்துள்ளதாக நெல்லை போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வெள்ளைச்சாமி தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் நெல்லை அருகே மாயமான்குறிச்சியைச் சேர்ந்த சிங்கத்துரை என்பவரை மும்பையில் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் மருதப்பபுரத்தைச் சேர்ந்த வேல்துரை, திருவைகுண்டம், பரோலில் வெளிவந்த சுரேஷ் என்பவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்தக் கொலை வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கைதானவர்கள் தரும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications