நிவாரண நிதி திரட்ட கால்பந்து போட்டிகள்: சுனில்தத்
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கால்பந்துப் போட்டிகள் நடத்தப்படும் என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் சுனில்தத் கூறியுள்ளார்.
சென்னை வந்த சுனில்தத் சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். பட்டினப்பாக்கம், ஓடைமாநகர், பெசன்ட் நகர், சீனிவாசபுரம்ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களையும் பார்த்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கால்பந்துப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் கிடைக்கும்பணம் சுனாமி நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என்றார் சுனில்தத்.
இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்னான்டிக் குப்பத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர்அவர்களுக்கு நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் அரிசி, பருப்பு, பிளாஸ்டிக் குடம், வாளி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
அவரிடம் பொம்மலாட்டக் கலைஞர்கள் செல்வராஜ்- சாந்தி தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ளபொம்மைகள் கடல்நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக முறையிட்டனர். வங்கி மூலம் அவர்களுக்குக் கடன் பெற்றுத் தருவதாக சுனில் தத்உறுதியளித்தார்.
பின்பு மருத்துவ முகாம்கள் மற்றும் பல நிவாரண உதவி வழங்கப்படுவதைப் பார்வையிட்டார். காஞ்சிபுரம் மாவட்ட திட்ட அதிகாரிவேலுசாமியிடம் சுனாமி அலையின் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதனையடுத்து நிருபர்களிடம் பேசிய சுனில் தத் கூறியதாவது:
நான் பார்த்த இடங்களில் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் முன்பாக தங்களது வேதனையைச் சொல்லி அழுகிறார்கள். அவ்வாறுஅழுவது குழந்தைகளின் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உணவு, துணிகள் வழங்கினால் மட்டும் போதாது. அவர்கள் மீண்டும் தங்களது வாழ்வைப் பெறவேகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவ தயாராக இருக்கிறது என்றார்.
பின்னர் பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டு சென்றார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications