7ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஜெ
சென்னை:
![]() |
சுனாமி பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ளார்.
இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், டிசம்பர் 26ம் தேதியன்று தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரலைகள் திடீரென மிகச்சீற்றத்துடன் தாக்கியதன் காரணமாக தமிழகம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
தமிழக அரசு விரைந்து தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. பாதிக்கப்பட்டமக்கள் அனைவரும் மறுவாழ்வு பெறும் வகையில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சுனாமி பேரலைகளின் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டமக்களுக்கான நீண்ட கால மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் கேட்டறிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளேன்.
இக் கூட்டம் 7.1.2005, வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வதுதளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
இக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது மேலான ஆலோசனைகளையும்கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கூட்டத்துக்கான அழைப்பு தமிழக அரசின் பொதுத்துறை வாயிலாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications