120 போலீஸாருடன் ஜெயலட்சுமிக்கு தொடர்பு: டிசி, எஸ்ஐயிடம் விசாரணை
சென்னை:
ஜெயலட்சுமிக்கு 120 போலீஸாருடன் தொடர்பு இருந்ததாக சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந் நிலையில் மதுரை திடீர் நகர்காவல்நிலைய துணை கமிஷ்னர் பொன். ஜீவனந்தம், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி ஆகியோரிடம்சிபிஐ இன்று விசாரணை நடத்தியது.
காவல்துறையையே கிடுகிடுக்க வைத்த ஜெயலட்சுமி 22 போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். மேலும்பலர் தன்னுடன் உறவு வைத்திருந்தாகவும், அவர்களால் தனக்கு பிரச்சினை ஏதும் ஏற்படாததால் அவர்களின் பெயரை வெளியிடவிரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் ஜெயலட்சுமி தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், அவருக்கு 120 போலீஸ் அதிகாரிகளுடன்தொடர்பு இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
மதுரையில் 2 போலீஸ் கமிஷனர்கள், 2 போலீஸ் துணைக் கண்காணிப்பாளர்கள், 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 21 சப் இன்ஸ்பெக்டர்கள்,திண்டுக்கல்லில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள்,
வேலூரில் ஒரு துணைக் கண்காணிப்பாளர், கோவையில் துணைக் கமிஷனர், ஒரு துணைக் கண்காணிப்பாளர், 21 இன்ஸ்பெக்டர்கள்,திருச்சியில் 2 துணைக் கண்காணிப்பாளர்கள், 16 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 120 பேரின் விவரங்கள் சிபிஐ அதிகாரிகளுக்குக்கிடைத்துள்ளது.
இவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த சிபிஐ போலீஸார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரது பெயர்களையும் ஜெயலட்சுமிதனது டைரியில் குறிப்பிட்டு இருந்ததாகவும், அந்த டைரியைக் கைப்பற்ற சிபிஐ முயற்சித்து வருவதாகவும் தெரிகிறது.
இந் நிலையில் இன்று காலை திடீர் நகர் குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷ்னர் பொன். ஜீவானந்தத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர். சிபிஐ எஸ்பி சிவாஜி தலைமையிலான டீம் இவரை விசாரித்தது.
அதே போல எஸ்.எஸ். காலனி காவல் நிலைய எஸ்ஐ துரைப்பாண்டியும் விசாரிக்கப்பட்டார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications