நில அதிர்வால் விரிசல்: அரசு மருத்துவமனை இடிப்பு!
சென்னை:
நில நடுக்கம் காரணமாக விரிசல் ஏற்பட்டதையடுத்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பெண்கள்பிரிவு இன்று இடிக்கப்பட்டது.
அத்தோடு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்களை எழுப்பவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 26ம் தேதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3 முறை நில அதிர்வுகள்ஏற்பட்டுவிட்டன.
இதில் ஸ்டான்லி மருத்துவமனையின் பெண்கள் பிரிவில் உள்ள கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து வார்டில் இருந்த பெண்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அந்த வார்டு மூடப்பட்டு, யாரும்உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந் நிலையில் விரிசல் ஏற்பட்ட கட்டடத்தை மருத்துவமனை டீன் டாக்டர் குணசேகரன், பொதுப்பணித்துறைதலைமைப் பொறியாளர் ஜெயச்சந்திர மோகன் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அதை இடித்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. செய்யப்பட்டது. இதையடுத்து அந்தக்கட்டடத்தை இடிக்கும் பணி இன்றே தொடங்கியது.
இது குறித்துடாக்டர் குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண்கள் பிரிவின் பழைய கட்டடம் 1969ம்ஆண்டில் கட்டப்பட்டது. இதன் அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டது. இப்போது இதில் தான் விரிசல்ஏற்பட்டுள்ளது.
இதனால் அதை இடித்து விட முடிவு செய்தோம். கட்டடத்தை இடிப்பதால் மருத்துவமனையில் நோயாளிகளுக்குஎந்த பாதிப்பும் ஏற்படாது.
இத்தோடு ஸ்டேன்லி மருத்துவமனையில் உள்ள பிற பழைய கட்டடங்களையும் இடித்து விட்டு புதிய கட்டடங்கள்கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 24 கோடி நிதி கோரியுள்ளோம்.
இந்த நிதி கிடைத்தவுடன் புதிதாக 10 மாடிக் கட்டடம் எழுப்பப்படும். புதிய கட்டடத்தில், அனைத்து நவீனமருத்துவ பிரிவுகளும் அமைக்கப்படும். நவீன மருத்துவக் கருவிகளும் நிறுவப்படும்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக ரூ. 4 கோடி செலவில் 2 அடுக்குகள் கொண்ட விடுதியும்கட்டப்படும் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications