ஜெ. தானம்: வருமான வரி விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

குருவாயூர்:

முதல்வர் ஜெயலலிதா தானமாக கொடுத்த தங்க மகுடத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு ஜெயலலிதா ஒரு யானை, விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தங்க மகுடம் உள்ளிட்டவற்றை கடந்த2001ம் ஆண்டு தானமாக கொடுத்தார்.

இதில் தானமாக வழங்கப்பட்ட தங்க மகுடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னையில் உள்ள வருமான வரித்துறை ஆணையர்அலுவலகத்திலிருந்து குருவாயூர் கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்து வந்த கோவில் நிர்வாகம், வருமான வரித்துறையின் நெருக்குதால் தற்போதுஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

8ம் தேதி மாலை 3 மணிக்கு தங்க மகுடம் வெளியே எடுக்கப்பட்டு ஆய்வுக்காக வரும் வருமான வரி அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

நிர்வாகத்தின் இந்த முடிவு குருவாயூர் பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்க மகுடத்தை சென்னையிலிருந்து வரும்வருமான வரித்துறை ஆணையர் சோதனையிட அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டவை கடவுளுக்கு தானமாக வழங்கப்பட்டவை ஆகும். அவற்றை வெளியே எடுத்து விசாரணைக்குஉட்படுத்துவது கோவிலின் புனிதத்தையும், பக்தர்களின் மனதையும் புண்படுத்துவது போலாகும் என்று இந்து அமைப்புகள் கூறின.

இதையடுத்து வருமான வரித்துறை ஆய்வுக்கு அனுமதி தருவதா இல்லையா என்று கேரள அமைச்சரவை முடிவு செய்யும் என்றுஅறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் வருமான வரித்துறை ஆய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாகத்தின் சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கையில்,

நகைகள் வைக்கப்பட்டுள்ள லாக்கரின் சாவிகள் கோவில் தேவஸ்தான நிர்வாகி அனில்குமார் மற்றும் ஷேத்திரம் ஊராளன் மல்லிச்சேரிபரமேஸ்வரன் ஆகியோரிடம் உள்ளது. இருவரும் சேர்ந்துதான் லாக்கரைத் திறக்க முடியும்.

அனில்குமாரின் உறவினர் இறந்து விட்டதால் அவர் தீட்டாகியுள்ளார். எனவே அவரால் கோவிலுக்குள் நுழைய முடியாது. இதன்காரணமாக, ஆய்வை வேறொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு சென்னை வருமான வரி ஆணையர் அலுவலகத்துக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை வருமான வரி அதிகாரியின் ஆய்வு நடக்காது என்று தெரிகிறது.

இதற்கிடையே, குருவாயூர் கோவில் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும், கோவில் புனிதம் காப்பாற்றப்படும் என்று கேரளமாநில அறநலையத்துறை அமைச்சர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

சென்னை வருமான வரித்துறை அதிகாரி ஆய்வுக்கு அனுமதி தந்தது தொடர்பாக கோவிலின் நிர்வாகி அனில்குமாடம் அவர் விளக்கம்கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+