காஞ்சி: பல்கலை. துணைவேந்தரிடம் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கர மடத்தால் நடத்தப்படும் சாஸ்திரா நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சேதுராமனிடம் காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
துணைவேந்தர் சேதுராமனிடம் காட்டு பங்களாவில் வைத்து சுமார் 1 மணி நேரம் விசாரணை நடந்த்தினர். விசாரணைக்குப் பின் வெளியேவந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கும்பகோணம் மகாமகம் விழாவின்போது 1 லட்சம் பேருக்கு சங்கர மடம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான செலவைசங்கர மடம் ஏற்றதா அல்லது பல்கலைக்கழகம் ஏற்றதா என்று போலீஸார் கேட்டனர்.
அன்னதானச் செலவுகள் முழுவதையும் பல்கலைக்கழக நிர்வாகம்தான் ஏற்றது என்பதை போலீஸாரிடம் தெரிவித்தேன். இது தொடர்பானகணக்குகளை சனிக்கிழமை தாக்கல் செய்வதாகக் கூறினேன்.
இதையடுத்து சனிக்கிழமையும் என்னிடம் விசாரணை நடக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர் என்றார் சேதுராமன். நேற்று மட்டும் 10பேரிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications