குமரிக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

Rescue operation

சுனாமியால் சின்னாபின்னமான கன்னியாகுமரிக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடங்கியுள்ளது.

சுனாமி அலைத் தாக்குதலுக்கு கன்னியாகும மாவட்டத்தில் 1,000 பேர் வரை பலியாகியுள்ளனர். குறிப்பாக கொளச்சல், முட்டம்,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகிய பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கிய வேகத்தை டிவி காட்சிகளில் பார்த்து பீதியானமக்கள் கன்னியாகுமரிக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர்.

இதனால் கடந்த 10 நாட்களாக கன்னியாகுமரி, சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந் நிலையில் நேற்று முதல் (வியாழக்கிழமை) மீண்டும் பயணிகள் வருகை ஆரம்பமாகிவிட்டது.

இருப்பினும் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்ல யாரும் முன் வரவில்லை. சுனாமி பீதியே இதற்குக் காரணம்.

குமரிக்கு மீண்டும் பயணிகள் வருகை தொடங்கியுள்ளது, உள்ளூர் வியாபாரிகளுக்கும், விடுதி உரிமையாளர்களுக்கும் நிம்மதியைக்கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+