மகா பெரியவர் ஆராதனை விழா: விஐபிக்கள் ஆப்சென்ட்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Maha periyavar மகாப் பெரியவர் என மக்களால் வணங்கப்பட்ட மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 11வது ஆராதனை ஜெயந்தி (நினைவுதினம்) இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்றது. வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் தவறாமல் ஆஜராகிவிடும் விஐபிக்களை இம் முறைகாணமுடியவில்லை.

காஞ்சிப் பெயரிவன் ஆராதனை தினத்தையொட்டி காலை முதல் சங்கர மடத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.பிற்பகல் வரை 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மடத்திற்கு வந்து பெயவரின் நினைவிடத்தில் மலர் தூவி பிரார்த்தனை செய்தனர்.

ஜெயேந்திரர் சிறையில் இருக்கும் நிலையில், இளைய சங்கராச்சாரியாரான விஜயேந்திரர் தான் சிறப்புப் பூஜைகளை செய்தார்.

பெரியவன் சமாதி அமைந்துள்ள பிருந்தாவனத்தில் ஆந்திரா, கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்தவேத விற்பன்னர்கள் கடந்த மூன்று நாட்களாக ஹோமங்கள் நடத்தினர்.

பின்னர் சமாதியின் பூஜை நடந்தது.

கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் பாடி பெரியவரை பிரார்த்தித்தனர்.

இந் நிகழ்ச்சியில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, சந்திரலேகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1993ம் ஆண்டு டிசம்பரில் மகா பெரியவர் முக்தியடைந்தார். அப்போது முதல் ஆண்டுதோறும் அவரது நினைவாக ஆராதனை நிகழ்ச்சிநடக்கிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட முக்கிய விவிஐபிக்கள் நாடு முழுவதும் இருந்தும் வந்து கலந்துகொள்வார்கள். ஆனால், அவர்களை இம்முறை காண முடியவில்லை.

அதே நேரத்தில் பெரியவர் மீது பக்தி கொண்ட பொது மக்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் பெரும் அளவில் பங்கேற்று பூஜைகளில்கல்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+