கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி மாற்றம்!
சென்னை:
சுனாமி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்யாமல், திணறித் தவித்த கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ரமேஷ் சந்த் மீனா இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, குறிப்பாக குளச்சல், முட்டம் ஆகியஇடங்களுக்கு சுனாமி தாக்கி 3 நாட்களாகியும் ஆட்சித் தலைவர் ரமேஷ் சந்த் மீனா செல்லவில்லை.
மேலும் நிவாணரப் பணிகளிலும் இம் மாவட்ட நிர்வாகம் சுணங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்திபரவியது. பல இடங்களில் சாலை மறியல்கள், பேருந்துகள் சிறைப் பிடிப்பு என மக்கள் கொந்தளித்துப் போய் போராட்டங்களில்ஈடுபட்டனர்.
கலெக்டர் ரமேஷ் சந்த் மீனாவை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்தது.
இதையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக சுனில் பாலிவால்நியமிக்கப்பட்டுள்ளார். பாலிவால் இதுவரை தேனி மாவட்ட கலெக்டராக இருந்து வந்தார்.
இதேபோல, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த கார்த்திக், கரூர்மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்து வரும் ராஜஷ்ே லக்கானி, தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ் சந்த் மீனாவுக்கு தமிழ் சுத்தமாகப் புரியாது. இதனால் இவரால் தமிழகத்தில் எந்த மாவட்ட நிர்வாகப்பொறுப்பையும் சரியாக கவனிக்க முடிந்தது இல்லை.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications