சுனாமி தாக்கிய பகுதிகளில் அம்மை நோய் பரவல்!!
டெல்லி:
![]() |
தமிழகத்தில் 15 பேருக்கும், அந்தமானில் 13 பேருக்கும் அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டடது. மேலும் சிலருக்குவயிற்றுப்போக்கு மற்றும் சின்னம்மை தாக்குதல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நோய்கள் சாதாரண காலங்களிலேயே வரக் கூடியதுதான் என்றாலும், நாங்கள் விழிப்பாகவே இருக்கிறோம். இது அஜாக்கிரதையாகஇருக்கும் நேரமல்ல. இந்தப் பகுதிகளில் தீவிர நோய்த் தடுப்பு முறைகளைக் கையாண்டு வருகிறோம்.
சுனாமி தாக்கிய பகுதிகளில் பல மருத்துவ முகாம்களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மோசமாகப் பாதிக்கப்பட்ட அந்தமான் தீவுஉள்ளிட்ட பகுதிகளில் 50 மருத்துவர்கள் கொண்ட குழு 2 மாதங்களுக்கு அங்கேயே தங்கி பணியாற்றவுள்ளது.
ஐ.நா. கண்காணிப்பு:
இதற்கிடையே, சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளில் நோய் பரவுவதைத் தடுக்க ஐ.நா. சபையின் உலக சுகாகதார நிறுவனம் முழுக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கடல் நீர் புகுந்த இடங்களில் இப்போது நீர் வற்றிவிட்டாலும், அந்தப் பகுதி மக்களை நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது என்று அந்நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் சாம்லி லியன்பங்க்சங் தெரிவித்துள்ளார்.
அந்தமானில் மன்மோகன் சிங்:
இந் நிலையில் இன்று காலை அந்தமான் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பதிலும்,தேவையான நிவாரணப் பணிகளைச் செய்வதிலும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார்.
எதிர்பாராத இந்த பேரழிவினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசுசெய்யும் என்று உறுதி கூறவே நான் இங்கு வந்துள்ளேன்.
நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்போது புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம்வந்துவிட்டது. மத்திய அரசு தனது முழு பலத்தையும் அந்தப் பணியிலும் ஈடுபடுத்தும் என்றார் சிங்.
பின்னர் மன்மோகன் சிங், கார் நிக்கோபார் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப்பார்வையிட்டார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications