அநாதரவான குழந்தைகளை வளர்க்க போட்டா போட்டி!
சென்னை:
சுனாமியால் அனாதரவாகிவிட்ட குழந்தைகளை அவர்களது கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி அரசுக்காப்பகங்களில் ஒப்படைக்க மறுத்து வருகின்றனர்.
சுனாமி பாதித்த மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர், உற்றார், உறவினர்களை இழந்து ஆதரவற்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை அரசே தத்தெடுத்துக் கொள்ளும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும் இக்குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மொத்தமே 100 குழந்தைகள் சேர்ப்பு:
முதல்வரின் அறிவிப்புப் படி தற்போது நாகர்கோவில், நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் காப்பகங்கள்தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் அநாதரவான குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் அரசு எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த அளவிலான குழந்தைகளே காப்பகங்களில் சேர்ந்துள்ளன.
நாகப்பட்டிணம் காப்பகத்தில் 30 குழந்தைகளும், நாகர்கோவில் காப்பகத்தில் 45 குழந்தைகளும் (இவர்கள் குமரி மாவட்ட குழந்தைகள்),கடலூர் காப்பகத்தில் 25 குழந்தைகளும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அரசு எதிர்பார்த்ததை விட மிக மிக குறைந்த எண்ணிக்கை இது.
கிராத்தினர் உணர்ச்சிவசம்:
இது குறித்து கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் மீட்புப் பணி ஆணையர் கரியாலி கூறுகையில்,பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அவர்களது உறவினர்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவர்களே எடுத்துக் கொண்டுள்ளனர்.
அக் குழந்தைகளையும் தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி அரசு காப்பகங்களில் ஒப்படைக்க மறுக்கிறார்கள்.
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கிராமத்தினர் இவ்வாறு கூறுவதால் நாங்கள் அவர்களிடம் எதையும் விளக்க முடியவில்லை.இருப்பினும் நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து எதிர்காலத்தில் மேலும் பல குழந்தைகள் காப்பகங்களில் ஒப்படைக்கப்படுவார்கள் என்றுநினைக்கிறோம் என்றார்.
பணம் தான் காரணமா?
ஆனால் இதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அனாதரவாகிவிட்ட குழந்தைகளுக்கு அரசுத் தரப்பில பெரும் அளவில் நிதியுதவிஅளிக்கப்படவுள்ளது.
ரூ. 5 லட்சம் வரை குழந்தைகள் பெயரில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் பலஉதவிகளையும் அவர் அறிவித்துள்ளார்.
எனவே இந்த நிதியுதவி மற்றும் பிற உதவிகளை அபகரிக்க நினைப்போரும் ஏராளமான அளவில் உள்ளனர். இவர்கள் அனாதரவாகிவிட்டகுழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு, தாங்கள் அவர்களது உறவினர்கள் என்று கூறி வருவதாகத் தெரிகிறது.
தத்ததெடுக்க போட்டி:
இதற்கிடையே சுனாமியால் அனாதரவான குழந்தைகளை தத்தெடுக்க உலகெங்கும் இருந்தும் ஏராளமான மக்கள் முன் வந்த வண்ணம்உள்ளனர். ஆனால் இதுதொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து இதுவரை முறையான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்தக் குழந்தைகள் குறித்த பட்டியல் தயாரித்து வருவதாகவும், இப்பணி முடிய சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது, அதன் பிறகேதத்து கொடுப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications