ஜெயலட்சுமியை விசாரிக்க வந்த போலீஸ்: தடுத்த சிபிஐ

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiசிவகாசி ஜெயலட்சுமியின் அண்ணன் ராஜாராம் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் ஈடுபட காவல்துறைக்கு சிபிஐ தடைவிதித்துள்ளது.

ஜெயலட்சமி சொன்ன பாலியல் புகார்கள் குறித்து போலீசாரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலட்சுமியின் அண்ணன் ராஜாராம் மற்றும் தம்பி சீனிவாசன் ஆகிய இருவரும், கோவை உக்கடம் பகுதியில் நூற்பாலை நடத்தி வந்தனர்.இதற்காக கோவையைச் சேர்ந்த ஒருவரிடம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு பஞ்சு வாங்கியிருந்தனர்.

ஆனால் இதற்கான பணத்தை அவர்கள் கொடுக்கவில்லை. இதையடுத்து பஞ்சு வியாபாரி கோவை போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் ராஜாராம், சீனிவாசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

நீதிமன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக சீனிவாசன் மட்டும் வந்தார். ஆனால் ராஜாராம் வரவில்லை,அவர் தலைமறைவாகி விட்டார்.

இதைத் தொடர்ந்து ராஜாராமை கைது செய்து ஆஜர்படுத்த கோவை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பிடிவாரண்ட்டைசெயல்படுத்துவதற்காக ராஜாராமை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ராஜாராம் குறித்து விசாரிக்க கோவை போலீஸார் மதுரைக்கு வந்தனர். எல்லீஸ் நகரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டுக்குப் போனபோலீஸார் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர்.

ஆனால் ஜெயலட்சுமி சிபிஐயின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்று ஜெயலட்சுமியின் வீட்டில்பாதுகாப்பாக உள்ள போலீஸார், கோவை போலீஸாரிடம் தெரிவித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட கோவை போலீஸார், ஜெயலட்சுமியை விசாரிக்கஅனுமதி கோரினர். ஆனால் அவர்களுக்கு அனுமதி தர சிபிஐ மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து கோவை போலீஸார் ஜெயலட்சுமியின் சொந்த ஊரான காக்கிவாடன்பட்டிக்குச் சென்றனர். அங்கும் அவர்களுக்குராஜாராம் குறித்தத் தகவல் கிடைக்கவில்லை.

இதையடுத்து, ராஜாராமுக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கொடுத்த 2 பேரை விசாரித்தனர். அவர்களிடமிருந்தும் சரியான தகவல்கிடைக்கவில்லை.

வெறுத்துப் போன போலீஸார், ஜெயலட்சுமி குறித்து நன்கு தெரிந்த ஏட்டு கண்ணனிடம் விசாரித்துப் பார்த்தனர். ஆனால் தனக்கு ராஜாராம்குறித்து எதுவும் தெரியாது என்று அவர் கூறி விட்டார்.

இதனால் ராஜாராம் குறித்து யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமல் மதுரையில் முகாமிட்டு, காதைக் குடைந்து கொண்டுகாத்திருக்கின்றனர் கோவை போலீஸார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+