சுனாமி நிவாரணம்: டி.ஆர்.பாலுவுக்கு ஜெ. பாராட்டு!
சென்னை:
சுனாமி பாதிப்பைத் தொடர்ந்து மத்திய அரசிடம் உதவிகள் பெறுவதற்கு அமைச்சர் டி.ஆர்.பாலு மிகவும் உதவிகரமாக இருந்ததாக முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
![]() |
அப்போது மத்திய அமைச்சர்கள் சரத்பவார், தயாநிதி மாறன், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர். சுமார் 1 மணி நேரம்நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் முதல்வர் பேசுகையில்,
தமிழகத்தில் சுனாமி தாக்குதலையடுத்த மறு கட்டுமானப் பணிக்கு ரூ. 4,800 கோடி நிதி தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தினேன்.தமிழகத்தின் 1,076 கி.மீ. கடற்கரை முழுவதும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்ற கோரினேன். இதற்கு ரூ. 5,000 கோடி செலவாகும்.
தமிழகத்தில் எங்கெல்லாம் தடுப்புச் சுவர்களும், தூண்டில் வளைவுகள் எனப்படும் கடலுக்குள் பாறைத் தடுப்புகளும் இருந்தனவோஅங்கெல்லாம் சுனாமி பாதிப்பு குறைவாகவே இருந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளோம்.
இதனால் கடலோரம் முழுக்க தடுப்புச் சுவர் கட்டும் பணியை விரைவாகத் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், மீன் வலைகளை வாங்க, சீர் செய்ய ரூ. 1,054 கோடி கோரினேன். தமிழக அரசின் கோரிக்கைகள்குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.
சுனாமி பாதிப்புக்குப் பின் மத்திய அரசிடம் உதவிகள் பெற மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மிகவும் உதவிகரமாக இருந்தார் என்றார்ஜெயலலிதா.
கருணாநிதியுடன் சந்திப்பு:
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
கோபாலபுரம் வீட்டில் நடந்த இச் சந்திப்பின்போது சிங்கிடம் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை சுனாமி நிவாரண நிதிக்கு கருணாநிதிவழங்கினார்.
சுமார் 20 நிமிடங்கள் கருணாநிதியுடன் பேசிக்கொண்டிருந்தார் மன்மோகன் சிங்.
அப்போது, மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், பழனிமாணிக்கம், காங்கிரஸ் தலைவர்கள் ஜி.கே.வாசன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்ஆகியோரும் உடனிருந்தனர்.
பின்னர் வெளியே வந்த மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுனாமி தாக்குதலை தேசிய சீரழிவாக அறிவித்துள்ளோம்.இந்த பேரழிவிலிருந்து எப்படி மீண்டு வருவோம்.
நிவாரணப் பணிகளை தற்போது மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 90 சதவீத மீனவர்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வலைகள், படகுகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியுள்ளது என்றார்.
வைகோ சந்திப்பு:
முன்னதாக ஆளுநர் மாளிகையில் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகமீனவர்களுக்கு இலவசமாக வீடுகள், படகுகள், வலைகள் வழங்க வேண்டும் என்று கோரினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு













Click it and Unblock the Notifications