முகாம்களிலிருந்து வலுக்கட்டாயமாய் வெளியேற்றப்படும் மக்கள்!
நாகர்கோவில்:
![]() |
சுனாமி பாதிப்புக்குள்ளாகி சிதறிப் போன கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகள், சர்ச்சுகளில் பாதிக்கப்பட்டமீனவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது வீடுகள், இருப்பிடங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டனய
இந் நிலையில் தற்போது மீனவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். பள்ளிக்கூடங்களைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் இதையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் மீனவர்கள் அவசர அவசரமாகவெளியேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேலமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நேற்று அவர்களது சொந்த ஊரில்கொண்டு வந்து இறக்கி விடப்பட்டனர். ஆனால் அவர்களை வரவேற்க ஊரில் உறவுகள் யாருமில்லை. மாறாக, இடிந்து போன வீடுகள்,நாசமாகிப் போன அவர்களது கடந்த கால வாழ்க்கை ஆகியவைதான் காத்திருந்தன.
அதிகாரிகள் தங்களை இப்படிக் கொண்டு வந்துவந்து விட்டுவிட்டுப் போனதால் திணறிப் போயுள்ளனர் இப் பகுதி மக்கள்.
ஆரோக்கியம் என்ற மீனவர் கூறுகையில், மேல மணக்குடி மற்றும் கீழ மணக்குடியை இணைப்பதற்கு ஒரு மேம்பாலம் இருந்தது. இப்போதுஅந்தப் பாலத்தின் தூண்கள் மட்டும்தான் உள்ளன. மிகப் பெரிய பாலத்திற்கே இந்த கதியென்றால் சாதாரண எங்களது வீடுகள்என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
இந்த நிலையில் மீண்டும் எங்களது சொந்த ஊர்களுக்கே கொண்டு வந்து விடப்பட்டுள்ளோம். வீடும் இல்லாமல், வாசலும் இல்லாம்லதெருவில் நிறுத்தப்பட்டுள்ளோம். எதிலிருந்து வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது என்றே புரியவில்லை என்றார்.
இவரைப் போலவே மேலமணக்குடியைச் சேர்ந்த 300 பேர் வரை முகாம்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆனால் முகாம் நிர்வாகிகளின் கருத்து வேறுமாதியாக இருக்கிறது. இளங்கடை பகுதியில் சர்ச் ஒன்றில் முகாமை ஒருங்கிணைத்து நடத்திவரும் எம்.எஸ்.ராஜன் என்பவர் கூறுகையில்,
சுனாமி தாக்குதலில் சேதமடையாத வீடுகளைச் சேர்ந்தவர்களை மட்டுமே முகாம்களிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு செய்தோம்.எங்களிடம் பண இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால்தான் வீடுகள் நன்றாக உள்ளவர்களை மட்டும் திருப்பி அனுப்பிவருகிறோம்.
மேலும் அரசும் டிசம்பர் 31ம் தேதி முதல், அரிசி, தானியங்கள் வழங்குவதை நிறுத்தி விட்டது. இதனால் உணவும் வழங்க முடியாத நிலைஉள்ளது. எத்தனை நாட்களுக்கு எங்களால் சொந்த செலவில் இவ்வளவு பெரிய உதவியை செய்ய முடியும் என்கிறார்.
இதேபோல பல்வேறு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரமேஷ் சந்த் மீனாவிடம் (ஆட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து தற்போது இவர் அகற்றப்பட்டுவிட்டார்) கேட்டபோது, இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி வீடுகளுக்கு திருப்பிஅனுப்பவில்லை. தனியார்கள் இதுபோல செய்திருக்கலாம்.
பல முகாம்கள் பள்ளிகளில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகளையும் இயக்க வேண்டியதாக உள்ளது. எனவே முகாம்களில்தங்கியிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றார் மீனா.
ஆனால், இனிமேல் சுனாமியெல்லாம் வராது, ஆபத்து கிடையாது, கிளம்புங்க என்று கூறி முகாம்களில் இருப்பவர்களை அதிகாரிகள்வெளியேற்றி வருவதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு













Click it and Unblock the Notifications