செம்மொழிக் குழுவில் 2 தமிழர்கள்: கருணாநிதி
சென்னை:
தமிழ் மொழியைத் தொடர்ந்து வருங்காலத்தில் மேலும் சில செம்மொழிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் 2தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கன்னடத்தையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது. இதையடுத்து செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெற எந்தெந்த மொழிக்கு செறிவு உள்ளது என்பதை ஆராய ஒரு கமிட்டிஅறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கோரிக்கையை ஏற்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மேலும் சில செம்மொழிகளைத் தேர்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக்குழுவில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை. இதைத் தொடர்ந்து 2 தமிழர்களை குழுவில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கோரிகடந்த மாதம் நான் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினேன்.
இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். தற்போது செம்மொழித் தேர்வுக் குழுவில் முன்னாள் துணைவேந்தர்வி.சி.குழந்தைச்சாமி, தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் மருமகனும் தமிழறிஞருமான டாக்டர் கண்ணன் ஆகியோர் இக் குழுவில்புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications