விவேக் ஓபராயின் பாசம், தமிழ் நடிகர்களின் வேஷம்!
- கடலூரில் இருந்து சுதா அறிவழகன்
![]() |
ஆனால் தமிழின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் நம் ஊர் நடிப்பு வியாபாரிகள் இன்னும் இந்த மக்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.
சுனாமி அலைகள் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கோர தாண்டவமாடிய அடுத்த நிமிடத்திலிருந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில்பரிதவித்த மக்களுக்கு உதவ தமிழகமே அங்கு திரண்டு வந்தது.
மீட்புப் பணியிலும், பின்னர் நிவாரணப் பணியிலும் தமிழக மக்கள் மட்டுமல்லாது கர்நாடகத்தைச் சேர்ந்த பொது மக்களும் தங்களால் ஆனஉதவிகளைச் செய்தனர்.
பல மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
பெரும்பாலான தமிழக மக்களால் அறியப்படாத, இந்தி ஸ்டார்களில் ஒருவரான விவேக் ஓபராய் மும்பையிலிருந்து தனது பெற்றோருடன்ஓடோடி வந்தார். கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அவர் மனம் கலங்கினார்.
ஊருக்குத் திரும்பாமல் அங்கேயே முகாமிட்டுவிட்டார். கடலூர் மாவடத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட தேவனாம்பட்டினம் மீனவர்கிராமத்தை தத்தெடுத்தார்.
அங்கு பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடியின்உதவியோடு கிராமத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து முழு வீச்சில் நிவாரணப் பொருட்களை லாரிகளில் கொண்டு வந்து குவித்தார் விவேக் ஓபராய். முதல் கட்டமாகபாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக குடிசை வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டது விவேக் ஓபராய்தலைமையிலான டீம்.
இதுவ 200 குடிசைகளைப் போட்டுக் கொடுத்துள்ளார். அதில் 200 குடும்பங்களையும் தங்க வைத்துவிட்டார்.
அத்தோடு மருந்துப் பொருட்கள், அரிசி, பருப்பு, ஸ்டவ், மண்ணெண்ணெய், பாத்திரங்கள், உடைகள், கொஞ்சம் பணம் எனஅத்தியாவசியப் பொருட்களையும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களையும் தடையின்றி சப்ளை செய்து வருகிறார்.
மேலும் 400 குடிசைகள் அவரது செலவில் கட்டப்பட்டு வருகின்றன. தினசரி அதிகாலையிலேயே அவரது பணிகள் தொடங்கி விடுகின்றன.மாலை வரை தேவனாம்பட்டினம் முழுவதையும் நடந்தே சுற்றி வரும் விவேக் ஓபராய், நிவாரணப் பணிகளை தானே முன்னின்று நடத்திவருகிறார்.
மும்பையிலிருந்து யாரோ ஒரு சேட்டு வீட்டுப் பையன் வந்து நமக்காக உதவுகிறார் என்றுதான் இப் பகுதியினர் நினைத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இவர் ஒரு இந்தி நடிகர் என்று தெரிய வந்தபோது, கலங்கிவிட்டனர்.
நம் ஊர் நடிகர்களில் விஜய்காந்த் தவிர ஒருவர் கூட நம்மை எட்டிக் கூட பார்க்கவில்லையே என்ற ஆதங்கம் அவர்களை ஆக்கிரமித்தது.
இப்போது தற்காலிக குடிசைகளைப் போட்டுக் கொடுத்துள்ள ஓபராய், அடுத்த கட்டமாக நிரந்தர வீடுகளைக் கட்டுவது தொடர்பானஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். அத்தோடு சுகாதாரமான குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ஓபராயின் அயராத நடவடிக்கைகளின் காரணமாக பெரும் சோகத்தில் மூழ்கியிருந்த தேவனாம்பட்டினம் கிராமத்து மக்களிடம் இப்போதுமன நிம்மதியைக் காண முடிகிறது. முகங்கள் தெளிவடைந்து சித்துப் பேசும் அளவுக்கு அவர்கள் சகஜமாகியுள்ளனர்.
எங்கிருந்தோ வந்த விவேக் ஓபராய் இப்படி தமிழக கிராம மக்களுக்காக மாங்கு மாங்கென்று உழைத்துக் கொண்டிருக்க, நம் ஊர்மன்மதராசாக்கள் தங்கள் தொழிலில் பிஸியாக உள்ளனர்.
விஜயகாந்த் ஒரு முறை பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு தனது ரசிகர் மன்றங்களை நிவாரணப் பணிகளில் ஈடுபடச்சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் போன பின் அவரது மன்றத்தினர் ஒருவர் கூட மக்களைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
சரத்குமார் சென்னையில் தனது வீட்டை ஒட்டியுள்ள சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு அந்த மக்களுக்கு ஆறுதல் கூறியதோடுசரி. நெப்போலியன் சில பகுதிகளுக்குச் சென்று பார்த்தார்.
மற்றபடி பெரிய நடிகர்கள் என்று கூறிக் கொள்ளும் வேறு யாரும் இன்னும் இந்தப் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. தமிழ் மக்களின்உழைப்பால், அவர்களது பணத்தால், அவர்களது ஆதரவால் வளர்ந்த இந்த நடிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது வியர்வையின்ஒரு சொட்டைக் கூட சிந்தவில்லை.
ஆளாக்கி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா என்று வைரமுத்து எழுதித் தந்த வரியை கேமராவுக்கு முன் உச்சரித்த ரஜினி, எப்போதும்கொஞ்சம் அதிகமாகவே பேசும் கமல் போன்ற பெரிய நடிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. நிவாரண நிதிதந்துட்டாங்களாம்... இருவரும் சூட்டிங்கில் பிஸியாம்.
இதே போலத்தான் மற்ற இளம் நடிகர்களும் தங்கள் வேலைகளில் வழக்கம்போல் மும்முரமாக இருக்கிறார்கள்.
வேறு ஊர்க்காரரான விவேக் ஓபராய் தனது சில கோடிகளை செலவிட்டு இவ்வளவு பெரிய நிவாரண உதவிகள் செய்து வரும்போது, நம்மஊர் நடிகர்கள் நினைத்திருந்தால் மக்களுக்கு எவ்வளவு பெரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து தந்திருக்க முடியும்?
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்













Click it and Unblock the Notifications